Share on
இவ்வருடம் இடம்பெறும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும், 16 வயதை பூர்த்தியடையாத மாணவர்களுக்கு தபால் அடையாள அட்டை வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக தபால்மா அதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்தார். கொழும்பு பிரதான அஞ்சல் திணைக்களத்தில் மட்டுமல்லாது, ஒவ்வொரு மாவட்ட பிரதான தபாலகங்களிலும் தபால் அடையாள அட்டையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பரீட்சைகள் ஆரம்பமாகும் திகதிவரை இவ் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.
இவேளை தேசிய அடையாள அட்டையை பரீட்சாத்திகளுக்கு வழங்கும் முகமாக இந்நாட்களில் ஆட்பதிவு திணைக்களம் வார இறுதி நாட்களிலும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(அத தெரண)

0 comments :
Post a Comment