எகிப்து இப்படி ஒரு அரசியல் அமைப்பை ஒரு போதும் கண்டிருக்கவில்லை – கர்ளாவி

Share on

புதிதாக வரையப்பட்டுள்ள அரசியல் அமைப்பை சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் சபையின் தலைவரான செய்க் யூஸுப் அல் கர்ளாவி பாராட்டியுள்ளார். இது தொடர்பான இறுதி முடிவை மக்களே எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
“எகிப்து இவ்வாறான ஓர் அரசியல் அமைப்பை ஒருபோதும் கண்டிருக்கவில்லை. மன்னர் ஆட்சிக்காலத்தின்போதோ புரட்சியின்போதே கூட இவ்வாறான யாப்பு இருக்கவில்லை“ என கர்ளாவி டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
எகிப்திய மக்களுக்குத் தேவையான கோட்பாடுகளையும் பெறுமானங்களையும் இது உள்ளடக்கியுள்ளது. இதில் குறைபாடுகள் இருந்தால், அதனை பின்னர் ஈடுசெய்யலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசியல் அமைப்பு சபையில் இருந்து வாபஸ் பெற்ற மதச்சார்பற்ற சக்திகளுக்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார்நீங்கள் வாபஸ் பெற்றிருக்கக் கூடாது. உங்களது கருத்துக்களை சுதந்திரமாக முன்வைத்திருக்கலாம்.“
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :