பிலிப்பைன்சில் சூறாவளி 300 பேருக்கு மேல் பலி லட்சக் கணக்கானோர் பாதிப்பு!

Share on

பிலிப்பைன்ஸில் வீசுகின்ற கடுமையான சூறாவளியால் சுமார் 300 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். அத்துடன் லட்சக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
‘போபா’ எனப் பெயரிடப்பட்ட இந்த சூறாவளி பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியான மின்டானோ பகுதியை தாக்கியபோது, கொம்பொஸ்ரலா பள்ளத்தாக்கு மாகாணத்தில் மாத்திரம் குறைந்தது 156 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மீட்புப் பணியாளர்கள் அந்தப் பகுதிகளைச் சென்றடைந்துள்ளனர். ஆயினும் தனியான இடங்களில் வாழ்கின்ற சமுதாயத்தினரை எட்டுவதில் கஷ்டங்கள் உள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்த சூறாவளி தென் சீனாவின் கடலுக்கு வியாழக்கிழமை நகர்ந்து விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :