Share on
பாராளுமன்றத்தில் தமது கருத்துக்களை கூறுவதற்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிமை உள்ளது. இதனை தடுப்பதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை. குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தனது கருத்துக்களை கூறும் பொழுது சிறுபான்மை மக்களின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் அஸ்வர் எம்.பியின் நடவடிக்கைகளை பார்ககும் பொழுது கேவலமாக இருக்கின்றது என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது,
நேற்று பாராளுமன்றத்தில் சரவணபவன் எம்.பி தனது கருத்துக்களை முன்வைத்தார். இவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அபிவிருத்தி சம்பந்தமாக சந்தேகத்தைக் கிளப்பினார். யுத்தம் நடைபெற்ற காலம் தொட்டு இன்றுவரை வடமாகாண தமிழ் மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முழுமையான முறையிலே சேவையாற்றி வருகின்றார்.
இவரை விமர்சிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு உரிமை இல்லை என்பதே எனது கருத்தாகும். இன்று வடபகுதி மக்களின் அபிவிருத்தியை பேரினவாதிகளின் மத்தியிலும் கூட நேர்மையான முறையிலே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்துச் செல்கின்றார். இதனை சரவணபவன் எம்.பியும் தமிழ் தேசிய கூட்டமைப்பனரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இருப்பினும் வடபகுதி மக்களின் குறைநிறைகளை எடுத்துச் சொல்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு உரிமை உள்ளது. அவர்களது பாராளுமன்ற உரைக்கு பதிலளிப்பதற்கு எவருக்கும் நேரம் ஒதுக்கப்படுகின்றது. இருப்பினும் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பேசும் பொழுது அவர்களை இடைமறித்து கேவலமாக பேசுவதை அஸ்வர் எம்.பி. நிறுத்த வேண்டும்.
அதிகமாக சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்து சபையை முன்னெடுத்துச் செல்லும் அஸ்வர் இப்படியான செயல்பாடுகளில் ஈடுபட கூடாது. இவர்; எதிர் கட்சிக்கு மட்டுமல்ல ஆளுங்கட்சியான எங்களுக்கும் ஒரு தொல்லையாக தென்படுகின்றார். ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கெதிராக இவர் செயல்படுவதைப்பற்றி நான் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினருக்கெதிராக அனாவசியமான இவரது தலையீடு கேவலத்திற்குரியதாகும்.
இதன் மூலம் இவர் எவரைத் திருப்தி செய்து எதனைப் பெற்றுக் கொள்ளப் பார்க்கின்றார் என்பது எல்லோருக்கும் தெரியும். அரச தரப்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவரைப்பற்றி தெரிந்து கொண்டும் பூனைக்கு யார் மணிகட்டுவது என்ற நிலையில் உள்ளார்கள். இவரது இப்படியான நடிவடிக்கைகளை சபாநாயகர் இனியும் அனுமதிப்பது ஜனநாயக விரோத செயலாகும். சகல இன மக்களும் இணைந்த ஐக்கிய இலங்கை என்ற ஜனாதிபதியின் நிலைப்பாட்டை இவரது பாரளுமன்ற செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கின்றது.

நாட்டின் நல்லிணக்கத்திற்கு ஒரு சாபக்கேடாக இருப்பவர் ஆளும் கட்சி உறுப்பினரான அஸ்வர். அவர் எங்களுக்கு தொல்லை கொடுப்பதற்காகவே இந்த சபைக்கு வருகின்றார் என சாடிய யாழ் மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் சரவணபவன், தைரியம் இருந்தால் அஸ்வரும் ஒரு பத்திரிகை ஆரம்பிக் கட்டும் பார்க்கலாம் என்றும் சவால் விடுத்தார்.
நேற்று நாடாளுமன்றத்தில் அஸ்வருக்கும் சரவணபவனுக்கு மிடையில் சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத் தொழில் அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தின் போதே மேற்படி வாதப்பிரதிவாதம் இடம் பெற்றது.
இங்கு உரையாற்றிய சரவணபவன் எம்.பி.,
வடமாகாணத்தில் அழிக்கப்பட்டுள்ள பாரிய தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும். வேலைத் திட்டங்கள் பெயரளவில் மட்டும் இல்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும். கடந்த காலங்களில் கூறப்பட்டவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று குறைகளை சுட்டிக்காட்டினார்.
இந்த சந்தர்ப்பத்தில் ஆளும் கட்சி உறுப்பினரான ஏ.எச்.எம். அஸ்வர் குறுக்கிட்டு பேசத்தொடங்கினார். இதற்கிடையில் சரவணபவன் எம்.பி. ஐயா! இந்த மனிதர் சபையில் ஒரு தொல்லையாக இருக்கின்றார். நாங்கள் வட பகுதி அபிவிருத்தி தொடர்பாகப் பேசுகின்றோம். இவருக்கு என்ன தெரியும். இடையூறு செய்யாமல் இருக்க சொல்லுங்கள் என்றார்.
இதற்கிடையில், அஸ்வர் எம்.பி.,' நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் சபையில் தவறான விடயங்களைக் கூறுகின்றார். இவர் பொதுநோக்குடன் பேசவில்லை உதயன் பத்திரிகைக்காகவே பேசுகின்றார். நாளைக்கு அவருடைய பத்திரிகையில் செய்தி வெளிவரும் என்பதற்காகவே கதைக்கின்றார் என்றார்.
இதன்போது சரவணபவன் எம்.பி., 'இந்த மனிதர் சபையில் பெரும் தொல்லையாக இருக்கின்றார். எல்லோரும் நல்லிணக்கம் பற்றி பேசுகின்றோம். ஆனால் அஸ்வர் நல்லிணக்கத்துக்கே சாபக்கேடாக இருக்கின்றார். அஸ்வருக்கு தைரியமிருந்தால் அவரும் ஒரு பத்திரிகையை ஆரம்பிக்கட்டும். இது அவரால் முடியுமா என சவால் விட்டார்.

0 comments :
Post a Comment