Share on
பலஸ்தீனம் காஸாவில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் மனித படுகொலை மற்றும் வன்முறைகளைக் கண்டித்து தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின்; மாணவர்களால் கண்டன பேரணியும், பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணி பல்கலைக் கழக முஸ்லிம் மஜ்லிஸ் தலைவர் எம்.ஆர்.எம். ரமீஸ், மற்றும் மாணவர் பேரவையின் தலைவர் டீ.எம் சல்மான் பாரிஸ் ஆகியோரின் தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை தென்கிழக்கு பல்கலைகழக முன்றலில் இடம்பெற்றது.
இவ்வார்ப்பாட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட முஸ்லிம், தமிழ், சிங்கள, கிறிஸ்தவ மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர் .
பலஸ்தீனம் முஸ்லிம் உம்மாவின் முதல் கிப்லா,ஐக்கிய நாடுகள் சபையே! இஸ்ரேலின் அராஜகம் உனக்கு ஜனநாயகமாக தெரிகின்றதா?, காஸாவே நீ தனியாக இல்லை நாங்களும் உன்னுடன் இருக்கின்றோம், ஸியோனிஸ்ட்களிடமிருந்து பாலஸ்தீனைப் பாதுகாப்போம்.
போன்ற சுலோகங்களை ஏந்தி அமைதியான முறையில் தமது கண்டன எதி
ர்ப்பைத் தெரிவித்தனர் .
ர்ப்பைத் தெரிவித்தனர் .
.jpg)
0 comments :
Post a Comment