மகளிர் மட்டும் பூங்காவில் அபாயாவுடன் நடமாடிய ஆண் கைது:

Share on
அபாயா என்னும் முஸ்லிம் பெண்கள் அணியும் உடை அணிந்து முகத்தை மறைத்த வண்ணம் மகளிருக்காக மட்டும் ஒதுக்கப்பட்டிருந்த பூங்கா ஒன்றில் நடமாடிய இந்திய இளைஞர் ஒருவரை ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜா நகர பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் பெண்ணைப் போலவே ஆடை அணிந்திருந்த போதிலும் அவரது மீசையைக் கண்டு சந்தேகம் கொண்ட பெண் ஒருவர் உடனடியாக பொலிசாருக்கு தகவல
் கொடுத்ததையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஷார்ஜா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தினத்தில் பூங்காவானது பெண்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் அந்த விதிமுறையை மீறி மாறுவேடத்தில் நுழைந்து முறையற்ற விதத்தில் நடந்து கொண்ட குற்றச்சாட்டுக்காக இவரை கைது செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த இந்திய நபர் சட்டவிரோதமான முறையிலேயே ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியிருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஷார்ஜா பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.


இவருக்கு தேவையா இது இப்ப என்ன செய்வார் மாமியா வீடு ஆய்த்தம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :