வெலிக்கடை சிறையில் போலியான அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி பெற்ற சிம்

Share on
வெலிக்கடைச் சிறைச்சாலை கைதிகளுடன் தொடர்புகளைப் பேணிய நபர்கள் பற்றிய தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

சிறைச்சாலையில் கண்டு பிடிக்கப்பட்ட செல்லிடப் பேசி சிம் அட்டைகளின் மூலும் இந்தத் தகவல்கள் கிடைத்துள்ளன. கைதிகள் அடிக்கடி தொடர்புகளைப் பேணிய அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் மற்றும் ஏனைய தரப்பினர
் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.

போலியான அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி இந்த சிம் அட்டைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு அருகாமையில் உள்ள தொலைபேசி கோபுரங்களின் தரவுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளன. பாதுகாப்பு தரப்பினர் நடத்திய விசாரணைகளின் போது இந்திய கைதிகளிடமிருந்தும் சில செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலை அதிகாரிகளுக்கும், கைதிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு பேணப்பட்டு வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இவ்வாறு கைதிகளுடன் தொடர்புகளைப் பேணிய அதிகாரிகள் ஏற்கனவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :