மட்டக்களப்பில் போத்தலினால் குத்தப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

Share on

மட்டக்களப்பு நகரின் வாவிக்கரையில் உள்ள மதுபானசாலைக்குள் மதுபோதையில் இடம்பெற்ற மோதல் காரணமாக ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரவு 8.00 மணியளவில் வாவிக்கரை வீதியில் செலான் வங்கிக்கு அருகில் உள்ள மதுபானசாலைக்குள் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆதம்லெப்பை முகமட் முஸ்தபா (48வயது ) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.
மதுபானசாலையில் மது அருந்திக் கொண்டிருந்தபோது இருவருக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தின்போது குறித்த நபர் கடுமையாக தாக்கப்பட்டு, போத்தலினால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இவர் கூலித்தொழில் செய்துவருபவர் எனவும் சம்பவம் தொடர்பில் ஒருவரை தேடிவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :