நாவலப்பிட்டிய, கம்பளை ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணி



அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை அனர்த்த நிவாரணக் குழு, ஜெ.ஜெ. பெளன்டேஷன் மற்றும் எக்லட் யுனைட்ஸ் ஸ்ரீ லங்கா அமைப்புக்கள் இணைந்து நாவலப்பிட்டிய, கம்பளை ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை செயற்படுத்தப்படுகிறது

ஐ. ஏ. காதிர் கான்-
கில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை அனர்த்த நிவாரணக் குழு,
ஜெ.ஜெ. பெளன்டேஷன் மற்றும் எக்லட் யுனைட்ஸ் ஸ்ரீ லங்கா அமைப்புக்கள் இணைந்து நாவலப்பிட்டிய, கம்பளை ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை, அனர்த்தம் நிகழ்ந்த அடுத்த நாள் முதல், கட்டம் கட்டமாக திட்டமிடப்பட்டு முறையாக செயற்படுத்தப்படுகிறது.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத்தலைவர் சஹீட் எம். ரிஸ்மி மற்றும் ஜெ.ஜெ. பவுண்டேஷன் தலைவர் ஹனீப் ஹாஜி ஆகியோரின் நெறிப்படுத்தலில், கண்டி மாவட்ட பணிப்பாளர் இஃதிசாம் முஹம்மதின் தலைமையில், இளைஞர்,யுவதிகள், சர்வ கலாசாலை பட்டதாரி மாணவிகள் ஆகியோரின் பங்களிப்புக்களுடன் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த 7 ஆம் திகதி வரை, ஐந்து கட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன.
இதில், முதற்கட்டமாக, 02 ஆம் திகதி நாவலப்பிட்டிய, லபுல் கொட்டுவயில் உள்ள மக்களுக்கான உணவு, உடை ஏற்பாடுகள் மற்றும் உலர் உணவு, மருந்துப் பொருட்கள் வழங்கும் வேலைத்திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்டமாக, 03 ஆம் திகதி கம்பளை பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலர் உணவுப் பொதிகள், மருந்துப் பொருட்கள் வழங்கும் வேலைத்திட்டம், கம்பளை சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகரின் பொறுப்பில் வழங்கி வைக்கப்பட்டன.

மூன்றாம் கட்டமாக, 04 ஆம் திகதி லபுல் கொட்டுவ மற்றும் சேலம் பிரிஜ் மக்களுக்கான ஆடைகள், படுக்கைக்குத் தேவையான ஏற்பாடுகள் மற்றும் சுத்திகரிக்கும் பொருட்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
நான்காம் கட்டமாக, 05 ஆம் திகதி மஹகும்புர, பேய்லி வீதி மற்றும் லபுல் கொட்டுவ பகுதி மக்களுக்கு ஆடைகள், படுக்கை ஏற்பாடுகள் மற்றும் குடி நீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.
ஐந்தாவது கட்டமாக, 07 ஆம் திகதி நாவலப்பிட்டிய பிரதேச சபையுடன் இணைந்து, 15 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குத் தேவையான முதலுதவிப் பெட்டிகள் மற்றும் அத்தியவசிய மருந்து வகைகள் வழங்கும் வேலைத்திட்டம், பிரதேச செயலாளர் தலைமையில், நாவலப்பிட்டிய பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இறுதியாகக் கட்டமாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள், சீருடைத்துணிகள், வீட்டு உபகரணங்கள் மற்றும் படுக்கை மெத்தைகள் போன்றவற்றை வழங்கி வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறன.
மேலும், சர்வ கலாசாலை பட்டதாரி மாணவர்கள் ஊடாக, வெள்ளத்தால் சேதமான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் சேகரிக்கப்பட்டு, ஆவணப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :