கல்முனை வலய கல்விப்பணிப்பாளராக இலங்கை கல்வி நிர்வாக சேவை முதலாம் தர அதிகாரி எம்.எஸ் சஹதுல் நஜீம் கடமையேற்றார்.நூருல் ஹுதா உமர்-
ல்முனை வலய கல்வி பணிப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிவந்த எம்.எஸ் சஹதுல் நஜீம் இன்று (10) தனது கடமைகளை கல்முனையில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்று கொண்டார். கிழக்கு மாகாணகல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோரிடமிருந்து நியமன கடிதங்கள் கிடைக்க பெற்றிருந்த மருதமுனையை சேர்ந்த எம்.எஸ் சஹதுல் நஜீம், இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரி ஆவார்.

கல்முனை மற்றும் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகங்களின் பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், கல்முனை கல்வி மாவட்ட பொறியியலாளர், கணக்காளர், வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள், கல்முனை கல்வி வலய அதிபர்கள், வலயக்கல்வி பணிப்பாளர் சஹதுல் நஜீம் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

விஞ்ஞான பட்டதாரியான நஜீம் விஞ்ஞான முதுமாணி கல்வி முதுமாணிப் பட்டங்களை பெற்றுள்ளார் . 15 வருட கல்வி நிர்வாக சேவையிலுள்ள நஜீம் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளருக்கான நேர்முகப் பரீட்சையில் தேர்வாகி இந்த நியமனத்தை பெற்றுள்ளார். இவரது நியமனத்தை முன்னிட்டு வலயக்கல்வி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டது.

2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி இலங்கை கல்வி கல்வி நிர்வாக சேவையிலே இணைந்து கொண்ட அவர் , கடந்த 2019 மூன்றாம் மாதம் 12ஆம் தேதி தரம் 1 க்கு பதவி உயர்த்தப்பட்டார் .
சம்மாந்துறை வலயக் கல்விப்பணிமனைக்கு 2014 மார்ச் மாதம் மூன்றாம் தேதி நியமிக்கப்பட்டார் . சம்மாந்துறை வலயத்தில் அதி கூடிய 8 அரை வருடங்கள் சேவையாற்றி கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளராக பதவி ஏற்றுள்ளார் . நஜீம் மும்மொழியிலும் தேர்ச்சி பெற்ற ஒரு சிறந்த நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :