அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர் சங்கத்தின் இலங்கை நாட்டுக்கான பிரதம இணைப்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.தஸ்தகீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பத்திரிகைகளின் பிராந்திய ஊடகவியலாளர் என்பதுடன் சிலோன் மீடியா போரத்தின் உயர்பீட உறுப்பினராவார்.
மேலும் பல்வேறு சமூக சேவை அமைப்புகளில் இணைந்து சமூக சேவையில் ஈடுபட்டு வரும் ஒருவர் என்பதும் சுட்டிக் காட்டத்தக்கது.
கடல் கடந்த இந்த அமைப்பின் இலங்கை நாட்டுக்கான இந்நியமனத்தின் மூலம் இலங்கை ஊடகத் துறைக்கு பெருமை சேர்த்த எஸ். தஸ்தகீருக்கு ஊடகத்துறையினர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்
கொள்கின்றனர்.