அடங்காச் சோனி ஆசாத் சாலி என்று அழைக்கலாமா ?

டங்கா தமிழன் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அடங்கா சோனி என்று கேள்விப்பட்டோமா ?

ஆசாத் சாலியின் அரசியல் நடவடிக்கைகள் அனைத்திலும் எனக்கு உடண்பாடில்லை. இயக்க வெறி காரணமாக எமது சகோதரர்களை காட்டிக்கொடுத்ததில் அவர் முதன்மையானவர்.

சஹ்ரானை காண்பித்து அரசியல் செய்தவர்களில் அவரும் ஒருவர். ஆனால் அவரது துணிச்சல் பாராட்டத்தக்கது.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஆசாத் சாலி அவர்களுக்கு எதிராக அமைச்சர் விமல் வீரவன்ச அவர்கள் தனது வழமையான இனவாத சிந்தனையின் அடிப்படையில் பெரும்பான்மை சமூகத்தை தூண்டும் விதத்தில் விமர்சனம் செய்திருந்தார்.

விமலின் விமர்சனத்துக்கு ஆசாத் சாலி அவர்கள் கொடுத்த விளக்கம் மிகவும் பாராட்டத்தக்கது. எமது முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் பெட்டிப்பாம்பாக அடங்கியிருக்கின்ற இன்றைய காலசூல்நிலையில் ஆசாத் சாலியின் துணிச்சல் பாராட்டத்தக்கது.

அடித்தால் திருப்பி அடிக்க வேண்டும். அடியை வாங்கிக்கொண்டு வந்தால் அது எமது பலயீனம். இந்த பலயீனம் இருக்கும் வரைக்கும் எதிரி எமக்கு தொடர்ந்து அடிப்பான். அடிக்கின்றவனுக்கு எப்போது நாங்கள் திருப்பி அடிக்கின்றோமோ அப்போதுதான் அவன் மீண்டும் அடிப்பதற்கு அச்சப்படுவான்.

எனவே விமல் வீரவன்சவின் மிரட்டலுக்கு பயப்படமால் அடங்கா சோனியாக நெஞ்சை நிமிர்த்தி விமலை விவாதத்திற்கு அழைத்த ஆசாத் சாலி பாராட்டப்பட வேண்டியவர்.

முகம்மத் இக்பால்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :