ஹக்கீமை தோற்கடித்த- ஹாபிஸ் நசீர்

அபூ மபாஸ்-


டைபெற்று முடிந்த 2020 பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ஒரே ஒரு முஸ்லீம் வேட்பாளர் அதிலும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக அதன் சொந்த மரச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்.

குறித்த இத்தேர்தல் மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த சவால்களுக்கு மத்தியிலேயே இடம்பெற்றது. முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக கட்சியின் முதன்மை வேட்பாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹீர் மெளலானா களமிறக்கப்பட்டிருந்தார். அது மாத்திரமன்றி மெளலானாவை வெற்றி பெறவைக்க வேண்டும் என்று கட்சியின் தலைவர் ரவூர் ஹக்கீம் முழு மூச்சாய் உள்ளரங்கமாக வேலை செய்து வந்தமையும் ஹாபிஸ் நசீர் அறியாமலில்லை.

எடுத்துக்காட்டாக ஏறாவூருக்கு விஜயம் மேற்கொண்ட முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் விருப்பம் இல்லாதவர் போன்றே ஹாபிஸ் நசீரின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். மாறாக அலி ஸாஹீர் மெளலானாவின் பிரச்சார மேடையில் அவரது நடிப்புப் பாணியில் என்னுடன் அடுத்த பாராளுமன்றில் மெளலானா இருக்க வேண்டும் ஹாபிசை விட மெளலானா முக்கியமானவர் அனைவரும் வாக்களியுங்கள் என்று மறைமுகமாக அறிவித்தார்.

ஆனால் இந்த செயற்பாடு எல்லாவற்றையும் சரியாக அறிந்து கொண்ட ஹாபிஸ் நசீர் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான வாக்குகளைப் பெற்று தான் வெற்றி பெறவேண்டும் என்று முழுமூசாய் வேலை செய்தார். அதிலும் ஹாபிஸ் நசீருக்கு வாக்களித்தவர்களில் 90 வீதமானவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசைச் சேராதவர்கள் என்பதனை அவரது வாக்கு வித்தியாசம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அத்துடன் ஹாபிஸ் நசீர் முஸ்லீம் காங்கிரசில் மட்டு மாவட்டத்தில் போட்டியிடா விட்டிருந்தால் கட்சிக்கு 5000 வாக்குகள் கிடைப்பதும் சந்தேகமாகவே இருந்தது.

மேலும் மட்டு மாவட்டத்தில் ஹாபிஸ் நசீர் அஹமட் முன்னாள் முதலமைச்சராக இருக்கும் போது செய்த சேவைகள் அவரது துணிச்சலான நடவடிக்கைகளை விரும்பிய மக்களே அவருக்கு இத்தேர்தலில் அதிகமாக வாக்களித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சராக இருந்த பஷீர் சேகுதாவூத் ( வண்ணாத்திப் பூச்சி) முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான அலி சாஹீர் மெளலானா, அமீர் அலி, முன்னாள் ஆளுநரும் பல தடவைகள் அமைச்சுக்கள் பலவற்றிலும் இருந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ்.சுபைர் போன்ற பல அரசியல் அதிகாரங்களில் இருந்தோர் எல்லோரையும் தோல்வி காணவைத்து வெற்றிபெற்றிருக்கும் ஹாபிஸ் நசீர் அஹமட் முஸ்லீம் காங்கிரஸ் தலைவரின் உள்ளரங்க நடவடிக்கையை தோற்கடித்துள்ளார் என்பதனை விட வேறன்ன சொல்ல முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :