சுதந்திரந்திரத்துக்காய் போராடிய இனக்குழுமமே முஸ்லிங்கள்- -ஆரிப் சம்சுதீன்


எம்.என்.எம்.அப்ராஸ்-

72வது சுதந்திரதினத்தை முன்னிட்டு
கிழக்கு இளைஞர்கள் அமைப்பினால்
ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திரதின நிகழ்வு அமைப்பின் ஸ்தாபக தலைவர் தானிஸ் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் மாளிகைக்காடு சபீனா வித்தியாலயத்தில் (04) இடம்பெற்றது. இதன் போது அதிதியாக கலந்து கொண்ட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் உரையாற்றுகையில்
இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்

இந்த நாட்டிக்கு முஸ்லிங்கள் பல பங்களிப்பை ஆற்றினர் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக இலங்கையின் சுதந்திரத்துக்காய் போராடிய இனக்குழுமமே நாங்கள் போர்த்துக்கீசருக்கு எதிராக கடல்வழி யுத்தங்களை நிகழ்த்தி பின்னர் அதில் தோல்வியுற்றதால் இலங்கையில் முஸ்லிம்கள் மேற்குக் கரையோரங்களில் இருந்து குடி பெயர்க்கப்பட்டு கிழக்கு கரையோரங்களுக்கு கண்டிய மன்னர்களால் அடைக்கலம் கொடுக்க பட்டிருந்தனர் என்ற நிகழ்வினை யாரும் மறந்துவிட முடியாது . சுதந்திரத்துக்காகப் போராடிய , அதனால் பெரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுமான முதன்மை இனக்குழுமம் முஸ்லிம்கள் .ஒரு சிலர் எங்களை காட்டிக் கொடுக்கும் சமூகம் என வஞ்சிகின்றனர் இதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. நாங்கள் தான்
காட்டிக்கொடுக்கப்பட்டோம் என்பதை கூறிக்கொள்ள விருப்புகிறோம்.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது 1864 களில் என்று நினைக்கின்றேன் பொருளாதாரத்தினை கொள்ளையடித்து வறிய மக்களுக்கு கொடுத்து வந்த சுதந்திர போராளி சரயதியனை கைதுசெய்ய சுற்றிவளைத்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட தாக்குதலின்போது சரடியல் காயப்படவும் அவரது கூட்டாளியான மம்மலி என அழைக்கப்படுகின்ற முகமது அலி திரும்பி சுட்ட போது சுபஹான் எனப்படுகின்ற இஸ்லாமிய மலாய் போலீஸ் வீரர் கொல்லப்பட்டிருந்தார் . பின்னர் சரதியலும் முகமது அலியும் ஆங்கிலேயரினால் தூக்கிலிடப்பட்டிருந்தனர் . சுபஹான் கொல்லப்பட்ட தினமே பொலிசாரினால் பொலிஸ் தினம் என்று அழைக்கப்படுகின்றது ஏனெனில் பணிநிமித்தம் முதலாவது உயிர்நீத்த போலீஸ் வீரர் அவரே இவ்வாறு சுதந்திரப்போராட்டத்தில் நாம் சளைத்தவர்கள் அல்ல என்பதைப் பல தடவைகள் எமது முன்னோர்களால் நிறுபிக்கப் பட்டிருக்கின்றது .

எமது சமூகம் பற்றி இஸ்லாம் கூறுகின்ற நடுநிலைமை சமூகமாக இருக்க வேண்டுமென்றால் பொதுவான பணிகளை அதாவது ஊழல் ஒழிப்பு , சூழல் பாதுகாப்பு போன்ற விடயங்களில் எமது சமூக இயக்கங்கள் கவனம் செலுத்த வேண்டும் .

மேலும் ஒன்றுபட்ட இலங்கையை உருவாக்குவதற்கு அடிமட்ட சமூக உறவுகள் பலப்படுத்தப்பட வேண்டும்
அப்பொழுதுதான் உண்மையான சுதந்திரக் காற்றினை நாங்கள் சுவாசிக்க முடியும் என்றார்.

இதன் போது மதரசா மாணவர்களுக்கு அல் குர்ஆன்அன்பளிப்பாக வழகங்கப்பட்டதுடன் நிர்வாக உறுப்பினர்கள் அதிதிகள் நினைவு சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன்
அண்மையில் கிழக்கு இளைஞர்கள் அமைப்பு - ஸ்ரீலங்கா சிம்ஸ் கேம்பஸ் இணைந்து நடத்திய "தலைமைத்துவ மற்றும் உயர் வழிகாட்டல் கருத்தரங்கில் பங்குபற்றிய இளைஞர் ,யுவதிகளுக்கு சான்றிதல் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் முன்னாள் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை மற்றும் கலாசார பீடாதின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர், சிரேஷ்ட சட்டத்தரணி, ஓய்வு பெற்ற அதிபர் எம்.சீ.ஆதம்வாபா, காரைதீவு பிரதேச சபை பிரதி தவிசாளர் ஏ.எம்.எம்.ஜாஹிர் , காரைதீவு கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு. டேவிட் , பிரபல சமூக சேவகர் கலாநிதி ஹனீப் ஹாஜி, சம்மாந்துறை பொலீஸ் நிலைய அதிகாரி,
சிம்ஸ் கேம்பஸ் சந்தைப்படுத்தல் முகாமையாளர் நூருல் ஹுதா உமர், நிகழ்ச்சி திட்ட அதிகாரி எம்.எம். நஜாத்
சபீனா வித்தியாலய அதிபர் எம்.ஐ. எம்.அஸ்மி, அமைப்பின் பொது செயலாளர் முஸ்தபா முபாறக் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் அங்கத்தவர்கள் மற்றும் கல்விமான்கள், புத்திஜீவிகள், இளைஞர்கள் யுவதிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -