நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹிரினால் இரு சுகாதார உத்தியோகதர்கள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

ஜஹான்-
கில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹிரினால் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பணிபுரியும் இரண்டு உத்தியோகத்தர்கள் இன்று காலை (21) தக்கப்பட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டடுள்ளனர்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் பணிப்பாளர் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கு கலந்துகொண்ட கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உத்தியோகத்தருடன் தேனீர் கடைக்கு சென்றபோது கடைக்குள் சென்று நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹிரும் அவரின் ஒரு ஆதரவாளரும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நிந்தவூரைச் சேர்ந்த இரண்டு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

குறித்த உத்தியோகத்தர்கள் தமது கடமை நிமிர்த்தம் மைதானத்தில் பணிபுரிந்த சந்தர்பத்தினை பயன்படுத்தி அரசியல் ரீதியாக பழிவாங்கள் என்ற போர்வையில் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தாஹிரின் ஆதரவாளர்கள் நேற்று மாலை பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிமின் ஆதரவாளர்கள் இருவரின் வீட்டுக்குச் சென்று அச்சுருத்தி தாக்கியதுடன் வீட்டில் உபகரணங்களையும் சேதப்படுத்தியமை குறிப்பிட்டத்தக்கது.

இது தொடர்பாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் கடமையில் இருந்து உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்ட சம்பத்துடன் தொடர்புடைய நிந்தவூர் தவிசாளருக்கு இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.



குறித்த சம்பவத்தை நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹீர் மறுத்துள்ளார் குறித்த அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -