சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயாகமகேயுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்
நோர்வூட் சமுர்த்தி வங்கிக்கு 02/07 விஜயமொன்றை மேற்கொண்ட போது, சமுர்த்தி நலத்திட்டங்கள் பெருந்தோட்ட மக்களுக்கு கொண்டு செல்வதில் காணப்படும் சிக்கல்கள், சமுர்த்தி உத்தியோகஸ்தர்களின் தொழில்துறையிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் , பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு சமுர்த்தி உத்தியோகஸ்தகர்கள் கொண்டு வந்ததுடன் நோர்வூட் சமுர்த்தி காரியலாயத்திலுள்ள வளம் பற்றாக்குறை தொடர்பிலும் கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டினர்
நோர்வூட் சமுர்த்தி வங்கியின் கீழ் நோர்வூட் , மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட 2621 சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி முத்திரை வழங்கும் நிகழ்விற்கு அதிதியாக கலந்துகொள்ள சென்ற போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் மற்றும் நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர்களான நோட்டன்ராம், சிவனேசன், அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பிரத்தியேக செயலாளர் எஸ்.கமலதாஸன் ஆகியோர் நோர்வூட் சமுர்த்தி வங்கிக்கு விஜத்தினை மேற்கொண்டனர்
வங்கியின் முகாமையாளர் வின்சன்ட் ஜெயபிரகாஷ் மற்றும் சமுர்த்தி உத்தியோகஸ்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் தயாகமகேயுடனான சந்திப்பை ஏற்படுத்தி தருவதாகவும் சமுர்த்தி வங்கி கட்டிடத்தின் வளாக பாதுகாப்பு மதில் அமைப்பதற்கான ஒருத்தொகை நிதியினை ஒதுக்கீடு செய்து தருவதாகவும் திலகராஜ் தெரிவித்தார்.

