Admin-message ********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- [email protected] Admin-message
Headlines
Loading...
Admin-message

வரலாற்றின் புதிய பரிணாமம் !!!

லங்கை முஸ்லீம்களின் உரிமைக்கான வரலாற்றுத் துரோகத்திற்கு புதிய பரிணாமம் 04.06.2019 பிரசவிக்கப்பட்டது.
இலங்கைகான சுதந்திரப் போராட்டம் முதல் இன்றுவரை தாய்நாட்டின் இறமைக்காகவும் பொருளாதாரத்திற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற சமூகம் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது.

தனிநாடு கோரி விடுதலைப்புலிகளும், ஐனநாய ரீதியில் TNA கட்சியும் போராடினர்.30 வருடகால கொடூர பயங்கரவாதம் அரசியல் தலைவர்கள்,மத்திய வங்கி,தலதா மாளிகை,காத்தான்குடி பள்ளிவாசம் இனப்படுகொலை என சர்வதேசப் பயங்கரவாதத்தின் சகல கொடூரம்தையும் நிகழ்த்தியது . தற்கொலைக்கு தாக்குதல் மற்றும் விமானப் படைத்தாக்குதல் மற்றும் இந்தியப் பிரதமர் மீதான தற்கொலைத் தாக்குதல் என சர்வதேசத்தை நிலைகுலைய வைத்தது..இந்த காலகட்டத்தில் முஸ்லீம்கள் நாட்டின் இறமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக சிங்கள மக்களுடன் கைகோர்த்து நின்றனர்.

இதற்காக பல்லாயிரம் பேர் இடப்பெயர்வு,கொலை,ஆட்களத்தில் ,பலகோடி பொருளாதார இழப்பை முஸ்லீம் சமூகம் சந்தித்தது.
நாட்டில் 30 வருடகால பயங்கரவாதத்தை ஆதரித்தவர்கள் மற்றும் துணை நின்றவர்கள் ,இன்று 21 ஏப்ரல் தாக்குதலை வைத்கது முஸ்லீம்களை குறிவைப்பது வேடிக்கையாக உள்ளது.
மேலும் ஏப்ரல் பயங்கரவாத தாக்குதலை முழு முஸ்லீம் சமூகமும் எதிர்த்தது.அரசியல் தலமைகள்,கல்விமான்கள் மற்றும் உலமாக்கள் பகிரங்கமாக எதிர்த்தனர்.குறிப்பாக சில இடங்களில் முஸ்லீம்களே இத்தகைய துரோகிகளை இராணுவத்திடம் அடையாளப்படுத்தினர்...இத்தகைய நன்நோக்கத்தின் ஒருவீதம் கூட 30 வருடகால யுத்தத்தில் இலங்கை இராணுவத்திற்கு தமிழ்மக்களிடம் இருந்து கிடைக்கவில்லை .
உண்மையில் 2010ம் ஆண்டில் இருந்து பௌத்த இனவாதம் இலங்கையில் தலைதூக்க ஆரம்பித்தது ..இதன் திட்டமிட்ட செயற்பாடு ஹலால் பிரச்சனையில் தொடங்கி உண்ணாவிரதம் இருந்து நிறைவேற்று ஜனாதிபதியைக் கூட பொம்மையாக்கி பூதாகரமாகி உள்ளது.

மறுபுறம் டக்ளஸ் தேவானந்தவைத் தவிர TNA, தமிழ்முற்போக்கு கூட்டனி,கருணா அணி மற்றும் தமிழ்மக்கள் பேரவை என்பன 2015ம் ஆண்டுக்குப் பின்னர் முஸ்லீம்களுக்கு எதிரான இனவாத்த்தை சாயம்பூசிக் கொண்டது.தமிழ்மக்களின் வாக்குகளை இலக்காக வைத்து வடகிழக்கில் இனவாத செயற்பாடுகளை அரங்கேற்றியது.

குறிப்பாக 2015 மத ஆண்டுக்குப் பின்னர்
1)வடமாகாண முஸ்லீம்கள் மீள்குடியேற்றத்தை தடுத்தது 2)முஸ்லீம்களுக்கு புனர்வாழ்வு அல்லது மீள்குடியேற்ற அமைச்சு வழங்கக்கூடாது என நிபந்தனை விதித்து
3)கிழக்கு முதலமைச்சருக்கு எதிராக விஷமத்தன பிரச்சாரத்தை கட்டவிழ்த்து
4)ரணில் அரசாங்கத்தின் எந்தச் சலுகையும் முஸ்லீம்களுக்கு கிடைக்காமல் தடைசெய்தது
5)திருகோணமலை பாடசாளை ஆசிரியைகளின் ஹபாயா பிரச்சனை
6)கல்முனை /சாய்ந்தமருது தனியான பிரதேசபை நிர்வாக அலகு
7)கிழக்கில் மீள்குடிநேற்றம் மற்றும் காணிப் பிரச்சனைகளில் தொடர் தலையீடு
8)கிழக்கு மாகாண சபை மற்றும் சிற்றூரியர் வரையிலான நியமனங்கள் தடை.
என்று முஸ்லீம் சமூகத்தில் இருந்து தனித்துவமாக இல்லாமல் தனியாக செயற்படும் இனவிரிசல் அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கினர்.

அதேநேரம் சிங்களப் பேரினவாதம் அதிகாரப் போட்டியில் தாண்டவம் ஆடியது.நாட்டில் நிலவிய கொந்தளிப்பு மற்றும் ஸ்திரமற்ற அரசியலை தனக்குத் சாதகமாக்கி சிங்கள இனவாத சக்திகளை மஹிந்த,ரணில் மற்றும் மைதிரி ஆகியோர் தங்களது பதவிகளை பாதுகாக்கவும்,அதிகாரத்தை பிடிக்கவும் பலகோணங்களில் அரங்கேற்றி வருகின்றனர்..

இந்த இரண்டு சமூகத்தின் சூழ்ச்சிகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு மத்தியில் முஸ்லீம் சமூகம் நசுக்கப்பட்டது.மர்ஹூம் அஷ்ரபினால் 1989ம் ஆண்டுக்குப் பின்னர் முஸ்லீம்களின் அரசியல் தனித்துவமாக பயணித்தாலும்,தேசிய அரசியலுடன் இணைந்ததாகவே இருந்தது.இந்தப் போக்கு நாட்டின் இறமைக்கோ,பாதுகாப்பிற்கோ மற்றும் தேசிய நல்லிணத்திற்கோ ஒருபோதும் சவாலாக இருந்ததில்லை .
SLMC,ACMC என பல முஸ்லீம் கட்சிகள் இருந்தாலும் இரண்டு தேசியக் கட்சியிலும் முஸ்லீம ் அரசியல் தலமைகள் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராக இருந்தனர்.இதன் மூலம் தேசியத்திற்கும் பேரினக் கட்சிகளுக்கும் முஸ்லீம்கள் ஆதரவை வழங்கிவந்தமை சான்றாகும்.

இந்திய -இந்திய ஒப்பந்தம் ,ரணில் ,சந்திரிக்கா மற்றும் பிரபாகரன் உடன்படிக்கை,நோர்வே மத்தியஷ்தம் முதல் 56 நாட்கள் நடந்த அரசியல் மற்றும் அதிகார வெறித்தனமான சவால்களில் ,,நாட்டின் ஜனநாயகத்திற்காக நீதிமன்றம் வரை சென்று முஸ்லீம்அரசியல் சாதனை கண்டது .

இத்தனை சாதனைகள் மற்றும் முற்போக்கு செயற்பாடுகளுக்கு ஓரிரு முஸ்லீம் பெயர் தாங்கிகள் நடாத்திய தாக்குதல் சோதனையாகி உள்ளது.சட்டம் இத்தகைய துரோகத்தைச் செய்தவர்களுக்கு உச்சகட்டத் தண்டனை வழங்க வேண்டும்..
இந்த நாட்டின் இறமைக்கும் சுபீட்சத்திற்கும் சவாலாக அமையும் சகலரும் இனவேறுபாடுகளுக்கு அப்பால் தண்டிக்கப்பட வேண்டும்.இந்த நிலைப்பாட்டில் முழு முஸ்லீம் சமூகமும் ஏகோபித்தமாக உள்ளது.ஆனால் ஒவ்வொரு இனத்திலும் கடும்போக்கு சக்திகள் உள்ளது.பொதுபல,சிங்கள பலவின் செயற்பாடுகளுக்கு சிங்கள மக்களோ,பௌத்த மதமோ தண்டிக்கப்படலாகாது. 30 வருடகால LTTE பயங்கரவாதத்திற்கு தமிழ்மக்களை தண்டிக்க முடியாது.அப்படி நடந்திருந்தால் இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ்மக்களே எஞ்சி இருந்திருக்கும்.
ஆகவே நடந்த பயங்கரவாத தாக்குதல்களை சாதகமாக்கி முஸ்லீம் சமூகத்தை அழிப்பதற்கான சதிப்போக்கு துரோகிகளுக்கு இலகுவானது துரதிஷ்டவசமானதாகும்.
முஸ்லீம்களின் கலாச்சாரம்,பொருளாதாரம்,கல்வி மற்றும் இருப்பை படிப்படியாக அழிக்கும் நிகழ்ச்சி நிரல் வெற்றிகொண்டது.முஸ்லீம் அரசியல் தலமைகளை எப்படியும் ஏமாற்றலாம் என்ற மனநிலை இருந்தது .
ஆனால் திடீர் திருப்புமுனையாக சகலரும் ஒன்றுபட்டதால்,அரசியல்
பயணம் மட்டும் தோல்விகண்டது ..
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பலதுண்டுகளாக பல திசைகளில் முஸ்லீம்களின் அரசியல் பயணித்தது.பல்வேறு மட்டங்களில் தொடர்ந்து முயற்சித்தும் பேரினவாத கட்சிகளின் கைபொம்மையாக முஸ்லீம்கள் அரசியல் தொடர்ந்து ..இந்த நிலையில் முஸ்லீம்களது எதிர்கால அரசியல் கேள்விக்குறியாக நின்றது .
இந்த நிலையில் உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேசத்திலும் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தவார முஸ்லீம் அமைச்சர்களின் பதவி விலகலும் ஒற்றுமையும் அமைந்துள்ளது .
இந்த நாட்டில் அரசியல் வரலாற்றில் பலசாதனைக்கு முஸ்லீம் அரசியல் துணைநின்றது..
1)1977ம் ஆண்டுக்குப் பின்னர் SLFPஅழிந்து போனது. ஐனாதிபதி பிரேமதாசவை சாகும்வரை அசைக்க முடியாத நிலை இருந்தது .ஆனால் SLFP கட்சியை உயிர்ப்பித்து 1994ல் சந்திரிக்காவை அரியாசனம் ஏற்றியது SLMC தலைவர் மர்ஹூம் அஷ்ரபே.
2)30 தேர்தலுக்கு மேல் தோல்விகண்டு கட்சியை துண்டாடிய ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கியது முஸ்லீம் அரசியலாகும்.

3)இந்த நாட்டில் 1994ம் ஆண்டிற்குப் பின்னர் பல அரசாங்கங்களால் அரசியலமைப்பு வரைபு முன்வைக்கப்பட்டது .இந்த சந்தர்ப்பங்களில் நாட்டின் ஒற்றையாட்சி மற்றும் இறமைக்கு பாதகம் இல்லாத பக்கம் முஸ்லீம் அரசியல் நின்றது.
3)இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச நாடுகள் விரல்நீட்டினர்..விடுதலைப் புலிகளை ஆதரித்தனர்.ஐநா சபைகூட சர்வதேச விசாரணை என்ற நிலைக்கு வந்தது.இந்த நிலையில் சர்வதேச நாடுகளுக்குச்்சென்றும்,பிரதிநிதிகளை சந்தித்தும் இலங்கைக்கு சாதகமான சூழலை உருவாக்க முஸ்லீம் அரசியல் இறுதிவரை போராடியது .

4)வரலாற்றில் முதற்தடவையாக நடந்த அரசியல் நெருக்கடியில் 56 நாட்கள் பதவிகளை தூக்கிவீசினர்.நாட்டினதும் அரசியலமைப்பினதும் உண்மைக்காக நீதிமன்றம் வரை சென்று ஜனநாயகம் வெற்றிபெற துணைநின்ற முஸ்லீம் அரசியல் சாதனை உடையது.
இந்த நிலையில் சமூகத்தில் இருக்கின்ற ஒருசில விஷமிகளுக்காக முழுச் சமூகமும் தண்டிக்கபடலாகாது.முஸ்லீம்கள் மீது திட்டமிட்டு அரங்கேறும் வன்முறைகளாலும்,தாக்குதல்களாலும் நாட்டின் சட்டமும் ஒழுங்கும் சீர்கெட்டுள்ளது..ஒருசில காட்டு வாசிகளின் கைகளுக்குள் சட்டவாட்சி சிறைப்பட்டுள்ளது.
ஆகவே கடந்த பல வாரங்களாக முன்னால் இராஜாங்க அமைச்சர் கௌரவ ஹரீஷ் பல்வேறு நகர்வுகளை மேற்க்கொண்டார்.முஸ்லீம்களுக்கு எதிராகவும் முஸ்லீம் அரசியல் தலமைகளுக்கு எதிராகவும் காட்டுச் சட்டம் துணைபோன போது ,முதல்நபராக இதற்கு எதிராக குரல் கொடுத்தார்..

இவர் சகல முஸ்லீம் தலமைகளும் பதவி விலக வேண்டுமென முதன்முறையாக அரைகூவல்விட்டார்.இலங்கை முஸ்லீம்களின் அடுத்த தலமுறையின் தலைவராக எதிர்ப்பார்க்கப்படும் ஹரீஸின் அதிரடி நகர்வு கொழும்பு அரசியலை மட்டுமல்ல இன்று சர்வதேச அரசியலை நம்மீதான பார்வைக்கு வழியமைத்துள்ளது .
தனக்கும் தனது கட்சிக்கும் எதிரான அரசியலை மேற்கொள்ளும் றிசாத்,அசாத்சாலி மற்றும் ஹிஸ்புள்ளா ஆகிய மூன்று பேரையும் துரோகிகள் குறிவைத்த போது,,கௌரவ ஹரீஸ் இதனை சமூக கண்ணோட்டத்தில் நோக்கினார்..எந்தவொரு முஸ்லீம் அரசியல் தலமையும் பேசாது இருந்த போது ,ஹரீஸ் முஸ்லீம் அரசியல் தலமைகளின் ஒற்றுமைக்காக குரலை உயர்த்தினார்.
உண்மையில் அரசியல் அனுபவம்,சமூக சிந்தனை மற்றும் கொள்கை வகுத்தலில் ஆற்றல் கொண்ட சட்டத்தரணி ஹரீஸின் தொடர்ச்சியான செயற்பாடு பாராட்டத்தக்கது .
வரலாற்றில் ஒன்றுபடமாட்டார்களா?என்ற கேள்வியுடன் பயணித்த முஸ்லீம் அரசியலுக்கு கௌரவ ஹரீஸ் புதிய வடிவமைப்பை வழங்கினார்.குறிப்பாக ஓரிரு நாட்களில் பலதரப்பட்ட பேச்சுக்கள் மற்றும் சமரங்களுக்கு உள்ளாகி சகல முஸ்லீம் தலமைகளும் ஒரே மேசைக்கு வந்தமை சரித்திரம்.
அத்துடன் இத்தகைய ஒற்றுமை இலங்கை அரசியலில் பல கேள்விகளை புதிதாக எழுப்பி உள்ளது.குறிப்பாக
1)ரணிலின் ஆட்சியை தளம்ப வைத்துள்ளது
2)மஹிந்த தரப்பின் செயற்பாட்டை தணிய வைத்துள்ளது
3)தமிழ் கடுப்போக்கு அரசியலான TNAவை அச்சத்திற்கு உள்ளாக்கி உள்ளது
4)முஸ்லீம் சமூகத்துன் மத்தியில் உச்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது
5)சிங்கள கடும்போக்கு சக்திகள் மத்தியில் பாரிய ஏமாற்றத்தை வழங்கி உள்ளது
6)அடுத்த தேர்தலை எதிர்நோக்கும் பேரின கட்சிகளுக்கு முஸ்லீம்களது பலமானது சவாலாக உள்ளது
7)நாட்டின் நலனுக்காக பதவி துறந்த முஸ்லீம் அரசியல் மீது சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் பாரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

குறிப்பாக இரண்டு துருவங்களை பயணிக்கும் கௌரவ ஹகீம் மற்றும் றிசாத் அரசியலை நேர்கோட்டில் மையப்படுத்த கௌரவ ஹரீஷின் அர்ப்பணிப்பு இந்த இடத்தில் நிச்சயமாக நினைவு கூறப்பட வேண்டும்..இந்த சமூகத்தின் அடுத்த கட்ட அ
அரசியலை முன்னெடுக்கும் ஆளுமை தனக்கு உள்ளதை ஹரீஸ் நிரூபித்துள்ளார்.ஆகவே இந்த ஒற்றுமையை விட ,,இந்த ஒற்றுமையை பாதுகாப்பதே நமது வரலாற்று சாதனையாகும் .ஏனெனில் நமக்குள் ஒற்றுமை வரக்கூடாது என்பதில் இரண்டு பக்க இனத்திலும் பலருக்கு உடன்பாடு உள்ளது.ஆகவே இதனை மிகத் திட்டமிட்டு,வெளிப்படைத் தன்மையுடன் முஸ்லீம் தலமைகள் நகர்த்த வேண்டும்.அத்துடன் முஸ்லீம் இளைஞர்கள் , குறிப்பாக முகநூல் ஆர்வலர்கள் தமக்குள் இருந்த அரசியல் வேறுபாடுகளை களையவேண்டும்.இந்த முஸ்லீம் தலமைகளின் ஒற்றுமைக்காக தொடர்ந்து உச்சாகப்படுத்த வேண்டும்.நமது சமூகத்தின் இருப்பு,பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் சூன்யமாக்கப்பட்டுள்ளது .
நாம் இந்த நாட்டின் பிரஜைகள்.இந்த நாட்டுக்கு உண்மையானவர்கள்.இந்தநாட்டுக்காக உழைப்பவர்கள்.இத்த நாட்டையும் ,ஒற்றுமையையும் சீர்குழைப்பவர்களுக்கு அதிஉச்ச தண்டன வழங்க வேண்டும் என வேண்டுபவர்கள்.ஆகவே நமது ஒற்றுமையை இனி ஒருபோதும் துண்டாட விடவேண்டாம்.நமது நன்மைக்காக தனது பதவிகளை தூக்கி வீசிய நமது தலைவர்கள் ஒவ்வொருவரும் தமக்கு ஹீரோதான்.

வலிகள் நிறைந்த சமூகம் பலத்தைக் கொண்டு எழுந்துள்ளது

By:Fahmy MOHAMED
LLB(Hons),Attorney -At-Law-MPhil(UK)
Political Analyser-South Asian Region
முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.

vilamparam post page 1
Powered by Blogger.