கிழக்கு மாகாண முன்பள்ளி கல்வி பணியகத்தின் தவிசாளர் தலைமையிலான விசேடகுழு திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம்


எம்.ஜே.எம்.சஜீத்-
கிழக்கு மாகாண முன்பள்ளி கல்வி பணியகத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கடந்தஇரண்டு வார காலமாக அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ளமுன்பள்ளி கல்வி பணியகத்தின் அதிகாரிகள்,ஆசிரியர்கள், முன்பள்ளிகளின்நிருவாகத்தினர் ஒன்றிணைந்து முன்பள்ளி கல்வி பணியகத்தின் செயற்பாடுகளைசிறந்த பயனுள்ளதாக மாற்றி அமைப்பதற்கான விசேட கலந்துரையாடல் முன்னாள்கிழக்கு மாகாண அமைச்சரும், முன்பள்ளி கல்வி பணியகத்தின் தவிசாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்றது.

எதிர்வரும் இரண்டு வாரங்களில் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ளமுன்பள்ளி கல்வி பணியகத்தின் அதிகாரிகள், ஆசிரியர்கள்,முன்பள்ளி கல்விபணியகத்தின் நிர்வாகத்தினர் ஒன்றிணைந்து முன்பள்ளிக் கல்வி பணியகத்தின்செயற்பாடுகளை சிறந்த பயனுள்ளதாக மாற்றி அமைப்பதற்கான விசேடகலந்துரையாடல் நாளை (2019.03.11) திருகோணமலை மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

மூதூர் :-
மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேடகூட்டம் கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் செயலாற்று பணிப்பாளர் தௌபீக் அவர்களின் தலைமையில் நாளை காலை 09.30 மணியளவில் மூதூர் பிரதேசசெயலகத்தில் நடைபெறும்.

கிண்ணியா :-
கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கானவிசேட கூட்டம் கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் செயலாற்று பணிப்பாளர்தௌபீக் அவர்களின் தலைமையில் நாளை காலை 11.00 மணியளவில் கிண்ணியாமத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற உள்ளது.

திருகோணமலை :-
திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கிழக்கு மாகாண முன்பள்ளி பாலர்பாடசாலையின் மாவட்ட அதிகாரிகளுக்கான விசேட கூட்டம் நாளை கிழக்கு மாகாணமுன்பள்ளி பணியகத்தின் செயலாற்று பணிப்பாளர் தௌபீக் அவர்களின் தலைமையில்மாவட்ட காரியாலயத்தில் நாளை பிற்பகல் 12.00 நடைபெற உள்ளது.

கந்தளாய்:-
கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கானவிசேட கூட்டம் கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் செயலாற்று பணிப்பாளர்தௌபீக் அவர்களின் தலைமையில் நாளை பிற்பகல் 02.30 மணியளவில் கந்தளாய்சர்வோதய கூட்ட மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வுகளுக்கு கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண முன்பள்ளிகல்வி பணியகத்தின் தவிசாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின்தலைமையிலான விசேட குழு கலந்து கொள்ள உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -