Admin-message ********** மதிப்புமிகு ஊடகவியலாளர்களுக்கான தகவல்: இம்போட்மிரர் ஊடகவலயமைப்பானது செய்திகளின் தன்மைகளை உறுதி செய்யவும் பரந்து செயற்படவும் முக்கிய நிகழ்வுகளை தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் தரமானதாகத் தெரிவிப்பதற்காக உடனுக்குடனான நேரலைகளாக வழங்கவும் பணிப்பாளர்களை நியமிக்க உத்தேசித்துள்ளமையால் மாவட்டம் தோறும் ஆர்வமுள்ள ஆழுமையான அனுபவமுள்ளவர்களை நியமிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளன எனவே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு பணிப்பாளரும் அவர்களின் சிபார்சில் செய்தியாளர்களையும் நியமிக்கும் பணி மிக விரைவில் இடம்பெறும் அதில் நீங்களும் ஒருவராக இருக்க தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி [email protected] Call- 0776144461 - 0771276680 Admin-message
Headlines
Loading...
Admin-message

கிண்ணியாவில் பல்வேறு உதவிகள் வெளிநாட்டவர்களால் வழங்கி வைப்பு

ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இனங்காணப்பட்டவர்களுக்கான பல்வேறு உதவிகளாக பல சமூக உதவிகள் தென்ஆபிரிக்காவில் இயங்கும் அல் இமாட் அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வு கிண்ணியா அல் அதான் பாடசாலையில் இன்று (10) ஞாயிற்றுக் கிழமை அல் ஹிக்மா பவுண்டேசனின் தலைவர் அஷ்ஷெய்க் மொஹமட் அப்பாஸ் இபாதுள்ளா தலைமையில் இடம் பெற்றது.

தென் ஆபிரிக்காவை தலைமையகமாக கொண்டு இயங்கும் அல் இமாட் அமைப்பின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிண்ணியா அல் ஹிக்மா அமைப்பினால் அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டன.
வீடமைப்புத் திட்டம், சக்கரநாற்காலி, உலர் உணவுப் பொதிகள், கற்றல் உபகரணங்கள் என்பனவே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன .

விசேட தேவையுடையவர்கள், தாய் தந்தையை இழந்த பாடசாலை மாணவர்கள், கற்றலில் அதிக ஈடுபடுடைய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் போன்ற தெரிவு செய்யப்பட்டவர்களுக்கே இவ்வாறான உதவிகள் வழங்கப்பட்டன.
கற்றல் உபகரணங்கள் 50 அதிகம் , ரூபா பத்து இலட்சம் பெறுமதியான 20 வீடுகள்,உலர் உணவுப் பொதிகள் 20 க்கும் அதிகம் , சக்கர நாற்காலிகள் 20 க்கும் அதிகம் என்பன வழங்கப்பட்டன
குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட தென்ஆபிரிக்க மற்றும் லண்டன் நாட்டை சேர்ந்த நன்கொடையாளர்களுக்கான நினைவுச் சின்னமும் பொன்னாடை போர்த்தி கௌரவிப்புச் செய்யும் நிகழ்வும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களால் நடை பெற்றன.

பிரதியமைச்சருக்கான நினைவுச் சின்னமும் பொன்னாடையும் போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வினை அல் ஹிக்மா பௌன்டேசனின் தலைவர் மொஹமட் அப்பாஸ் இபாதுள்ளா அவர்களால் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப், அல் இமாட் அமைப்பின் ஸ்தாபகர் அஷ்ஷெய்க் யாகூப் வாஹிட், தென் ஆபிரிக்காவை சேர்ந்த ஹாரி ஸியாட் பெடல், மௌலானா அஹமட் சொசான் , லண்டனை சேர்ந்த ஹாபிஸ் டாக்டர் அப்துல் சமட் முல்லா மற்றும் கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம், கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கபில காலகே, கிண்ணியா பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர்களான எம்.எஸ்.ஹபீபுள்ளா, எப்.எம்.பௌமி , அல் அதான் பாடசாலை அதிபர் எம்.எஸ்.அப்துல் அஸீஸ் , பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டார்கள்.


முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.

vilamparam post page 1
Powered by Blogger.