வெற்றி தோல்வியின் வலிகளில் இருந்தே ஆரம்பிக்கிறது..


ந்த உலகில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் வாழ்க்கை என்பது ஒரு சவாலாகவே இருக்கிறது அதே போல மனிதனாகிய நமது வாழ்க்கை மிகப் பெரிய சவாலாகவே காணப்படுகிறது.
எம்மை கடந்து போகும் ஒவ்வொரு மணித்தியாலங்களிலும் எத்தனையோ சம்பவங்களுக்கு முகம் கொடுக்கிறோம் அந்த ஒவ்வொரு சம்பவங்களிலும் பல படிப்பினைகளை பெறுகிறோம் ஆனால் இன்னொரு சம்பவத்திற்கு முகம் கொடுக்கும் போது முன்னர் கிடைத்த படிப்பினைகளை மறந்துவிடுகிறோம் இதுவும் ஒரு காரணம் வாழ்வின் சவால்களை முகம் கொடுத்து சாமாளிக்க தெரியாமல் தடுமாறுவதற்கு.
பிறந்தோம் வாழ்ந்தோம் மரணித்தோம் என்ற நிலையில் நாம் இருந்தால் மனிதனாக வாழ்வதில் எந்த பயனும் இல்லை ஒரு மரம் கூட அதனுடைய வாழ்நாளில் அதிக பட்சம் கனிகளைத் தரும் குறைந்த பட்சம் நிழலாவது தரும் மரத்தை விடவா நீங்கள்...
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சாதனையாளர்களாக மறுவதாக இருந்தால் அதற்கான முயற்சிகளின் போது அதிகமான சோதனைகளை சந்தித்தே ஆகவேண்டும் இதுவரை சாதித்த அத்தனை சாதனையார்களும் அதிக சோதனைகளுக்கு முகம் கொடுத்து தனது தன்னம்பிக்கை ,விடா முயற்சியின் காரணமாகவே சாதனையாளர்களாக மாறியிருக்கிறார்கள்..
இளைஞர்களாகிய நாம் கனவு கான வேண்டும் இதைத்தான் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அறிவுரையாகச் சொன்னார் அவர் சொன்ன அந்த கனவு தூக்கத்தில் கானும் கனவு அல்ல மாறாக உங்கள் எதிர்காலத்தில் நீங்கள் சாதிக்க கானும் கனவு.
முதலில் நீங்கள் உங்கள் பெறுமதியை உணர வேண்டும் உங்கள் திறமைகளை இனங்கான வேண்டும் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் வரை முயற்சி செய்ய வேண்டும் என்னால் இதனை அடைய முடியும் என்னால் சாதிக்க முடியும் என்று உங்கள் மனதில் உறுதியாக நம்ம வேண்டும்.
உங்கள் இலட்சியம், கனவை நீங்கள் அடைவதற்கு முயற்சி செய்யும் போது பல தடைகள், வீன் கேலி கிண்டல்கள் உங்கள் மீது எறியப்படும் ,பல தோல்விகளை சந்திக்க வேண்டிய நிலை வரும் எமது முயற்சியிலும் நம்பிக்கையிலும் நாம் உறுதியாக இருந்தால் அடுத்தவர் கேலி,கிண்டல் நம்மை ஒன்றும் செய்ய முடியாது எத்தனை தோல்விகளை சந்தித்தாலும் அதில் உள்ள அனுபவங்களை வைத்து இன்னும் ஒரு படி மேலே போவதற்கு முயற்சி எடுக்க வேண்டும்..
எந்தவொரு முயற்சியின் போதும் பொறுமை, புத்திசாலித்தனம், திட்டமிடல் மிக மிக அவசியம் நமது முயற்சியில் வீழ்ச்சி ஏற்பட்டால் இவை பாதுகாக்கும்.

இறைவனின் நாட்டம் இல்லாமல் எதுவும் இல்லை என்ற இறை நம்பிக்கை அவசியம். தோல்விகள் வந்தால் இந்த இறை நம்பிக்கை உள்ளத்தில் வரவேண்டும் இதுவே எமது மனதை வலுப்படுத்தும்.
உங்களது இலக்கை நோக்கிய சாதனை பயணத்தில் எவ்வளவு தோல்விகளுக்கும் சோதனைகளுக்கும் முகம் கொடுத்து அவைகளை கடந்து அதன் மூலம் கிடைக்கும் அனுபவங்கள், படிப்பினைகளை வைத்து உங்கள் விடா முயற்சியில் நீங்கள் அடைந்த அந்த இலக்கு உறுதியானதும் நிரந்தரமானதுமாகும்.
அது கடந்து வந்த பாதையில் பல வலிகளை சுமந்திருந்தாலும் வெற்றியின் சுவையை அனுபவிக்கும் போது அந்த வலிகள் சுகமானதாக தோன்றும்..

இலகுவில் அடையும் இலக்கு இறுதி வரை நிலைக்காது..

மனிதனாக பிறந்த நம் ஒவ்வொருவருக்குள்ளும் திறமைகள் இருக்கிறது இதனை நாம் இனங்கண்டு அந்த திறமையை வைத்து எமது இலக்கை தீர்மானித்து அதனை அடைவதற்கு முயற்சி செய்து சாதனையாளர்களாக வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டும்..

எம்.பஹ்த் ஜுனைட்
(ஊடகவியலாளர்)

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -