தகுதியடைந்தும் மடையர்களாக்கும் அரசாங்கம்


ஹஸ்பர் ஏ ஹலீம்-
டந்த நல்லாட்சி அரசாங்கம் முதல் தற்போதைய ஐக்கிய தேசிய முண்ணனி அரசாங்கம் வரை பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனம் வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்திம் இவ்வாரம்,அடுத்த வாரம்,அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படும் என கல்வியமைச்சர் அகில விறாஜ் காரியவசம் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகிறார்.

என அகில இலங்கை தெரிவு செய்யப்பட்ட பாடசாலை விளையாட்டு சங்கம் இன்று (06) கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்தனர்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்
கடந்த 2018/12/26 ம் திகதி அகில இலங்கை தெரிவு செய்யப்பட்ட பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களாகிய நாங்கள் கல்வியமைச்சில் வைத்து கல்வியமைச்சர் அகில விறாஜ் காரியவசம் அவர்களை சந்தித்து நியமன இழுபறிநிலை மற்றும் அதனால் 3850 இளைஞர்,யுவதிகள் எதிர் நோக்கியுள்ள அன்றாட பிரச்சினைகள் சம்பந்தமாக எடுத்துக் கூறி இதற்கான உடனடி தீர்வு எட்டப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம்.
கல்வியமைச்சர் அகிலவிறாஜ் காரியவசம் அவர்களை நியமனம் விரைவாக வழங்கப்பட வேண்டும் என கோரிக்கைவிடுத்து இதற்கு முன்னரும் இரு முறை சந்தித்திருந்தோம்.கல்வியமைச்சரை நியமனம் வழங்க கோரி சந்தித்திருந்த சந்தர்ப்பங்கள் அனைத்திலும் ஒரே பதிலையே கூறி இருந்தார்.டிசம்பர் மாதம் 26ம் திகதி நடைபெற்ற இறுதி சந்திப்பின் போது ஜனவரி மாதம் 2 ம் திகதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் நியமனத்தை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என கூறினார்.
இருந்த போதிலும் கல்வியமைச்சர் குறித்த ஜனவரி 2ம் திகதியும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கவில்லை.
நியமனம் வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பதாக ஏமாற்றி வரும் கல்வியமைச்சர் 3850 இளைஞர்,யுவதிகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் செயற்படுவதையிட்டு அகில இலங்கை தெரிவு செய்யப்பட்ட பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சங்கம் கவலை கொள்கிறது.விளையாட்டின் மூலம் காட்டிய திறமைகளுக்கும்,பெற்ற சான்றிதழ் மற்றும் பதக்கங்களுக்கும் கிடைத்திருந்த வெகுமதியாக விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனம் பார்க்கப்பட்டது.

விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனம் கிடைக்கப் பெற்றதும் தங்களை போன்ற சாதனையாளர்களை உருவாக்கி தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக இலங்கை திருநாட்டின் நாமத்தை ஜொலிக்க வைக்க முடியும் என கனவு கண்ட 3850 இளைஞர்,யுவதிகளின் கனவு நியமன தாமதத்தால் சிதறடிக்கப்பட்டு வருகின்றது.
அரச பாடசாலைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்ட 3850 இளைஞர்,யுவதிகளும் இந் நாட்டின் விளையாட்டு வீரர்கள் என்ற பார்வையுடன் நோக்கப்பட வேண்டுமே தவிர அவர்களை கட்சி பிரிவினை கொண்டு நோக்க கூடாது.விளையாட்டு வீரர்கள் முழு நாட்டிற்கும் உரியவர்களே தவிர குறித்த கட்சிகளுக்கு உரியவர்களல்ல.எனவே நாட்டின் ஐனாதிபதியும்,பிரதமரும் இதனை புரிந்து செயற்பட வேண்டும் என்பது அகில இலங்கை தெரிவு செய்யப்பட்ட பாடசாலை பயிற்றுவிப்பாளர் சங்கத்தின் பணிவான வேண்டுதலாகும்.
ஏழு மாதங்களாக இழுபறிநிலையையும் அதனை வழங்குவதற்காக அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற தொடர் ஏமாற்றுதல்களும் நிறுத்தப்பட வேண்டும்.தற்போதைய அரசாங்கமானது நியமனத்தை வழங்காது இனியும் ஏமாற்றுமாக இருந்தால் அரசாங்கத்திற்கு எதிரான பாரிய அளவிலான போராட்டமும் நியமனம் வழங்கும் வரையிலான தொடர்ச்சியான உண்ணாவிரதமும் நடைபெறும்.எனவே 3850 இளைஞர்,யுவதிகளின் மனோநிலையை புரிந்து கொண்டு நியமனம் தொடர்பான விரைவான தீர்மானத்தினை தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும் என அகில இலங்கை தெரிவு செய்யப்பட்ட பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சங்கம் நம்புகிறது என்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -