S.சஜீத்-
காத்தான்குடி பிரதேச, தென் கிழக்கு பல்கலைக்கழக இளங்கலை மாணவர்களின் இரண்டாவது வருடாந்த பெருவிழா நிகழ்வு (05) சனிக்கிழமை காத்தான்குடி அந்-நாஸர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வானது மூன்று முக்கிய பகுதிகளாக அதாவது, புதிய மாணவர்கள் வரவேற்பு, நன்றி நவிழல் மற்றும் விடுகை வருட மாணவர்களுக்கான பிரியாவிடை என்பவற்றை உள்ளடக்கியதாக இப் பெருவிழா நிகழ்வு இடம்பெற்றன.
வர்த்தக பீட மூன்றாம் ஆண்டு மாணவன் எம். அசாம் தலைமையில் நடைபெற்றதோடு முதலாம் ஆண்டு மாணவர்களின் விசேட நிகழ்வுகள் மற்றும் விடுகை வருட மாணவர்களின் அனுபவப்பகிர்வு என்று பல மகிழ்ச்சியூட்டும் நிகழ்வுகளும் இதன்போது நடந்தேறின.
இதன்போது மாணவர்களுக்கான நினைவுச் சின்னங்கள் மற்றும் பாராட்டுக்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் காத்தhன்குடி தென்கிழக்குப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சமூகத்தின் 2019 வருடத்திற்கான புதிய நிர்வாகத் தெரிவும் நடைபெற்று 2019ம் ஆண்டு புதிய தலைவராக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவன் என்.எச்.எம்.சமீர் அவர்கள் தெரிவுக்குள்ளாகி அவரிடம் அனைத்துப் பொறுப்புக்கலும் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.