அமெரிக்கா மீது லெபனான் பொருளாதார தடை விதிப்பு..!

மெரிக்க அதிபர் டிரம்ப் ஜெருசலேம்யை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக தெரிவித்த இந்த செயலுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

ஜெருசலேம் பாலஸ்தீனத்தில்தான் இருந்தது. தொடர் போர் காரணமாக ஜெருசலேம் பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது. டெல் அவிவ் என்ற பகுதி இஸ்ரேலில் தலைநகராக இருந்தது. இந்த நிலையில் ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்கா அறிவித்தது.

இந்த அறிவிப்பு பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அரபு நாடுகள் அமெரிக்கா மீது பொருளாதார தடை கொண்டு வர இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தற்போது லெபனான் அமெரிக்கா மீது பொருளாதார தடை கொண்டுவர இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி அமெரிக்காவிற்கு எண்ணெய் பொருட்கள், ஆடைகள் ஏற்றுமதி தடை என பல திட்டங்கள் தீட்டியுள்ளதாம்.

அமெரிக்க அதிபரின் செயல்பாடுகள் அனைத்தும் அரபு நாடுகளுக்கு அதிர்ச்சி அளிக்க கூடியதாக இருந்து வருகிறது. எனவே, லெபனானின் கோரிக்கைக்கு அரபு நாடுகள் ஆதரவு அளிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -