ஹஸனலிக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கவேண்டும் -அடித்துக் கூறினார் கல்முனை ஜவாத்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடம் இன்று தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் தலைமையகமான தாறுஸ்ஸலாமில் கூடியது.

குறித்த உயர்பீடக் கூட்டத்தில் பலரும் கட்சியின் செயலாளர் பற்றிய பிரச்சனைகளுக்கு பல்வேறு கருத்துக்களை வழங்கினர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஜவாத் கருத்து தெரிவிக்கையில்:
இங்கே சிலர் கட்சியின் வரலாறு தெரியாமல் கதைத்துக் கொண்டு இருக்கின்றனர். கட்சியின் கடமைப்பினை மறந்து பேசிக்கொண்டிருகின்றனர். கட்சியை காப்பாற்றியவரைத் தூக்கியெறியச் சொல்கின்றனர். ஆனால் யார் இந்த ஹஸன் அலி...!
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆரம்பிப்பதற்கு முழுமூச்சாய் மறைந்த பெரும் தலைவருடன் இருந்தவர் செயல்பட்டவர். தலைவர் கட்சியை உருவாக்கியதன் பின்னர் அவருக்கு நடந்த கொடுமைகளால் கொழும்பில் இருப்பிடத்தை அமைத்துக்கொண்டார்.

ஆனால் அதன் பின்னர் கட்சியின் சகல நடவடிக்கைகளையும் தான் சிலரின் உதவிகளுடன் செய்தவர்தான் இந்த ஹஸனலி இவர் சொல்லமுடியாத துண்பங்களையெல்லாம் இக்கட்சிக்காக அனுபவித்து இருக்கிறார்.
 எனவே கட்சியில் இருந்து ஹஸனலியை நீக்க முடியாது அவருக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கி அவரை செயலாளராக நியமித்து கட்சியை வழி நடாத்துவதே நல்ல முறையும் இன்று கட்சிக்கு தேவையான ஒன்றுமாகும். எனவே  கட்சியில் ஏற்படவிருக்கும் பிழவுகளையும் பிரச்சனைகளையும்  தவிர்க்க  ஹஸனலியே மீண்டும் செயலாளராக நியமிக்க வேண்டும் என்று தலைவரைக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து பலரும் கருத்துக்களைத் தெரிவித்துக்கொண்டிருந்தனர்.
இறுதியாக மீண்டும் ஜனவரி முதல்வாரத்தில் கூடித் தீர்மானம் எடுக்கலாம் என்று உயர்பீடம் கலைந்தது.

இதற்க்குப் பதிலாகவே இது... கிளிக்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -