வீதியில் பஸ்ஸை நிறுத்திவிட்டு தொழுத முஸ்லிம் சாரதிக்கு நேர்ந்த நிலை..!

பிரித்தானிய நாட்டில் பள்ளி வாகனத்தை ஓட்டிச் சென்ற இஸ்லாமிய ஓட்டுனர் ஒருவர் வாகனத்தை பாதி வழியில் நிறுத்தி விட்டு தொழுகையில் ஈடுப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள Hampshire நகரில் Meon Junior என்ற பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியை சேர்ந்த 50 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அண்மையில் லண்டன் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் சென்ற பேருந்தை இஸ்லாமிய ஓட்டுனர் ஒருவர் இயக்கியுள்ளார்.

இந்நிலையில், சுற்றுலா முடிந்த நிலையில் நேற்று அனைவரும் பள்ளிக்கு திரும்பியுள்ளனர். பள்ளியை அடைய ஒரு மைல் தூரம் உள்ள நிலையில், திடீரென எவ்வித அறிவிப்பும் இன்றி ஓட்டுனர் பேருந்தை நடுவழியில் நிறுத்தியுள்ளார்.

பின்னர், பேருந்தை விட்டு இறங்கி அவர் தனது கால்களை கழுவிவிட்டு சாலையில் ஒரு சிறிய துணியை விரித்து அதன் முட்டியிட்டு தொழுகை செய்ய தொடங்கியுள்ளார். ஓட்டுனரின் இச்செயலால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு தொழுகையை முடித்த ஓட்டுனர் பேருந்தில் ஏறி பள்ளிக்கு திரும்பியுள்ளார். ஓட்டுனரின் இச்செயலுக்கு மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பெற்றோர் கூறுகையில், ‘ஓட்டுனர் நடுவழியில் பேருந்தை நிறுத்தியது தவறு. அதே சமயம், அந்த வழியில் கனரக லொறிகள் அடிக்கடி செல்லும் என்பதால் பேருந்து மீது மோதி விபத்தும் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது’ என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஓட்டுனரின் செயல் குறித்து ஆசிரியர் ஒருவர் பேசியபோது, ‘தொழுகையை சிறிது நேரம் அவர் ஒத்தி வைத்திருக்கலாம். பள்ளிக்கு செல்லும் தூரம் மிக அருகிலேயே இருந்தும் அவர் இவ்வாறு நடந்துக்கொண்டது அதிர்ச்சியாக உள்ளது’ என கூறியுள்ளார்.

இஸ்லாமிய மத தலைவரான Sumel Chowdhury என்பவர் பேசியபோது, ஓட்டுனர் செய்த காரியம் தவறு தான். இஸ்லாமியர்கள் ஒரு நாளில் 5 முறை தொழுகையில் ஈடுப்படுவார்கள்.

ஆனால், இவற்றை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தான் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஒரு வேளை தொழுகை தள்ளிப்போனால், அதனை இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் கூட செய்துக்கொள்ளலாம்’ என கருத்து தெரிவித்துள்ளார்.

பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர் இது குறித்து பேசியபோது, ‘ஓட்டுனர் செய்த செயல் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற செயல் மீண்டும் நடைபெறாமல் இருக்க ஓட்டுனருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக’ தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -