மஹிந்தவின் புதிய ஊழல் ஒன்று வெளிவந்தது...!

நாட்டு மக்களின் தலைவிதியினை மாற்றப்போகின்ற நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் மஹிந்த தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பிலான தகவல்களும் நாளாந்தம் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்தநிலையில் மஹிந்த குடும்பத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பிலான புதிய தகவல் ஒன்றினை சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

இதன்போது குறித்த ஊடகத்தினால் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கடந்த 2012 முதல் 2014 வரையிலான காலப்பகுதியில் ஜனாதிபதி செயலகத்தில் 2344228641.68 ரூபாய் (200 கோடிக்கும் அதிகமான) வரி செலுத்துவோரின் பணம் முன்னாள் ஜனாதிபதியின் பயணங்களுக்காக செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு செலவிட்ட பணம் 643250689.84 ரூபாய் எனவும், அப்பணம் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் அவரது பிரதிநிதிகளின் வெளிநாட்டு பயணங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வட பெக்கோ பல்கலைக்கழக மாணவர்களுக்கு 264000 ரூபாய் பணத்தினை அன்பளிப்பு செய்துள்ளதாகவும், 2013ம் ஆண்டு அறிவுரைக்காக 46732602 ரூபாயும் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக இலங்கை விமான சேவையினால் மேலும் ஒரு விலைப்பட்டியல் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அது 2014ம் ஆண்டும், அவ் விலைப்பட்டியலில் 305004001 ரூபாய் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய 2014ம் ஆண்டில் மாத்திரம் செலவிட்ட பணம் 948254720.84 ரூபாவாகும். அல்லது வேறு முறையில் கூறினால் கிட்டத்தட்ட 100கோடியாகும்.

2014ம் ஐக்கிய நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஏ 340 விமானத்தை வாடகைக்கு பெற்றுக்கொணடதற்கான விலைப்பட்டியல் இவற்றுடன் இணைக்கப்படவில்லை. அதனையும் இணைத்தால் விலைப்பட்டியல் மேலும் அதிகாரிக்கப்படும். மேலும் அது தொடர்பிலான தகவல்கள் இதுவரையில் கிடைக்கவில்லை.

இச் செலவுகளுக்கு இடையில் இரண்டு சந்தர்ப்பங்களில் இரண்டு கெமராக்கள் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், குறித்த இரண்டு கெமராக்களும் பணத்திற்கு பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நியூயோர்க் நகரத்தில் 2014ம் ஆண்டும் இக்கெமராக்கள் பணத்திற்கு பெற்றுக்கொண்டதாகவும், அதற்கு 529000 ரூபாய் பணம் செலுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வைத்து கெமரா உபகரணங்கள் பணத்திற்கு பெற்றுக்கொள்வதற்காக 9119141.39 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

கெமராக்கள் கடமைகளுக்காக பெற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது தனிப்பட்ட நடவடிக்கைகளுக்காக பெற்றுக்கொள்ளப்பட்டதா என்பது தொடர்பில் தெளிவாக தெரியவில்லை. 2014ஒக்டோபர் மாதம் ரோம், மிலன், வத்திக்கான நகரம் செல்வதற்காக முன்னாள் ஜனாதிபதி செலவிட்ட பணம் 67722245.34 ரூபாவாகும்.

ரோம் மற்றும் இத்தாலி மலர் கண்காட்சி பயணத்திற்கு ஏ 340 விமான செலவு 44195550 ரூபாய் விலைப்பட்டியல் ஒன்று ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ் விலைப்பட்டியலுக்கான பணத்தினை இதுவரையில் விமான சேவைக்கு செலுத்தப்படவில்லை. மூன்று நாட்கள் குறித்த விஜயத்திற்காக அரசாங்க திறைசேரியில் செலவிட்ட முழு பணம் 111917795.34 ரூபாவாகும். 2014 செப்டெம்பர் மாதம் ராஜபக்ச நியூயோர்க் பயணத்திற்கு செலவிட்ட பணம் 127052113.52 ரூபாய் (இதில் விமான கட்டணம் உள்ளடக்கப்படவில்லை). 2014ம் ஆண்டு அபுதாபி பயணத்திற்காக செலவிட்ட பணம் 5724005.61 ரூபாய். பொலிவியாவுக்கு விமானம் ஒன்று வரும் வரையில் மஹிந்த ராஜபக்சவுக்கு செலவிட்ட பணம் 50764270.90 ரூபாய்.

2014 ஜனவரி மாதம் முன்னாள் ஜனாதிபதியின் கடைசி மகன் ஜப்பான் செல்வதற்காக வரி பணத்தில் இருந்து 2086000 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருப்பதி கோவிலுக்கு செல்வதற்காக ஏ 340 விமானத்தை இலங்கை விமானச் சேவைகள் ஊடக முன்னாள் ஜனாதிபதி பெற்றுக்கொண்டுள்ளார்.

திருப்பதி வெங்கடேஷ்வரர் கோவிலுக்கு செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட விமானத்தின் கட்டணம் 3916836 ரூபாவாகும். இதற்கான கட்டணம் இதுவரையிலும் செலுத்தப்படவில்லை.

அவர் 4458225 ரூபாய் உட்பட அரசாங்க திறைசேரிக்கு செலுத்த வேண்டிய கடன் பணம் 12291297 ரூபாய் என தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -