கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள இரு அமைச்சு: விபரம்

கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள இரு அமைச்சு மற்றும் பிரதி தவிசாளர் பதவிகளுக்கு உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இதன்படி கிழக்கு மாகாண கல்வி அமைச்சருக்கான தெரிவாக திருகோணமலையை பிரதிநிதித்துவபடுத்தும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரான தண்டாயுதபாணியும்,

விவசாய அமைச்சருக்கான தெரிவாக மட்டக்களப்பினை பிரதிநிதித்துவ கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கி.துரைராஜசிங்கமும் பிரதி தவிசாளருக்கான தெரிவாக மட்டக்களப்பினை பிரதிநிதித்துவபடுத்தும் பிரசன்னா இந்திரகுமாரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கிழக்கு மாகாண சபையில் அமைச்சு பதவி வழங்கப்படும் எதிர்பார்க்கப்பட்ட இரா.துரைரெட்ணத்துக்கு எதுவித பதவிகளும் வழங்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கடந்த காலத்தில் அம்பாறை மாவட்டத்துக்கு ஒரு அமைச்சு பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுடனான கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -