கணவனை மகனாக ஏற்கவும்: முஸ்லிம் பெண்ணுக்கு நடந்த கொடுமை- வீடியோ

பிறவ்ஸ் முஹம்மட்-

மாமனாரின் குழந்தை தனது வயிற்றில் வளர்வதால் தனது சொந்தக் கணவனை ஏற்றுக்கொள்ளுமாரு இஸ்லாமிய மதகுருமார்கள் கூறியுள்ளனர். இந்தியா உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்ணுக்கே இக்கொடூரம் நடந்துள்ளதாக இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;

உத்தரப்பிரதேசம் மாநிலம் முஸாபர் மாவட்டத்தைச் சேர்ந்த சப்னம் (வயது 28) என்ற இப்பெண்ணின் கணவர் கடந்த 2 ஆண்டுகளாக துபாயில் வேலை செய்துவருகிறார். இந்நிலையில் தனது மருமகளை ஆயுதமுனையில் மாமனார் கற்பழித்துள்ளார்.

சுமார் ஒரு வருடமாக சப்னம் மாமனாரினால் கற்பழிக்கப்பட்டு வந்துள்ளார். இதுகுறித்து தனது கணவரிடம் முறையிட்டபோது, அவர் மனைவியின் மீதே குற்றம்சுமத்தியுள்ளார். சப்னம் தனது கணவரை விவகாரத்துச் செய்துவிட்டு அவரை மகனாக ஏற்றுக்கொண்டு மாமனாரை திருமணம் செய்யுமாறு மதகுருமார்கள் ஷரீஆ சட்டத்தின் அடிப்படையில் நீதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


இந்நிலையில் தனது நீதி வழங்குமாறு மாவட்ட ஆணையாளரிடம் சப்னம் முறைப்பாடு செய்துள்ளார். தனது வயிற்றிலுள்ள கருவை அழிப்பதற்கு அனுமதி வழங்குமாறும் அந்த முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பாதிப்பட்ட சப்னம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்; 

திருமணத்தின் பின்னர் மாமனார் எனது அழகை வர்ணித்து வந்தார். ஒருநாள் வீட்டில் யாரும் இல்லாதபோது, என்னை படுக்கையறைக்கு வருமாறு வற்புறுத்தினார். நான் மறுத்தபோது, கத்தியைக் காட்டி என்னை மிரட்டி கற்பழித்தார். மாமனார் அவருடைய செல்போனில் வீடியாவாக பதிவு செய்து என்னிடம் காட்டினார். இச்சம்பவம் பற்றிய யாரிடமாவது கூறினால், வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்போவதாக மிரட்டினார்.

இதனை எனது கணவரும், மாமியாரும் ஏற்றுக்கொள்கிறார்கள் இல்லை. கணவர் வீட்டாரே இதை ஏற்றுக்கொள்ளாதபோது தனது வயிற்றில் வளரும் கருவைக் கலைப்பதற்கு உத்தரவிடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் மாமனார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேபோன்ற சம்வம் உத்தரப்பிரதேசத்தில் 2005ஆம் ஆண்டு நடைபெற்றது. மாமனாரால் கற்பழிக்கப்பட்ட இம்ரானா என்ற பெண்ணுக்கு இந்த தீர்ப்பே வழங்கப்பட்டுள்ளது. மாமனாரை திருமணம் செய்துகொண்டு, கணவரை மகனாக ஏற்றுக்கொள்ளுமாறு ஷரீஆ சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :