700க்கு மேற்பட்ட பட்டதாரிகளை தன் கல்விச்சேவையால் உருவாக்கிய ஆசிரியர்- படங்கள் விபரம்

1997 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை தான் கற்ற கல்வியை பிறருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நன்நோக்குடன் தன்னலம் கருதாது தான் நினைத்தால் SLAS,SLPS போன்ற பரீட்சைகளை எழுதி நிருவாகம் மற்றும் இன்னும் இன்னும் பிற சேவைகளுக்குள் நுளைந்து பிறரைப்போன்று பெரும் செல்வந்தனாய் வாழக்கூடிய நிலையில் இருக்கலாம் ஆனால் இன்று ஒரு ஆசான் இம்போட்மிரர் ஊடக வலையமைப்பின் தேடல் நிகழ்வில் காணப்பட்ட ஒரு சிறந்த ஆசான் கலாநிதி அனீஸ்.

இவர் மூதூர் -2 ஐ சேர்ந்த அதிபர் சாகுல் ஹமீட் றுக்கையா தம்பதிகளின் கடைசி மகானாவார்  இவரது 4 சகோதரிகள், 2சகோதர்களும் ஆசிரியர்களாக கடமை புரிந்து சிலர் ஓய்வு பெற்றுள்ளனர்.

மூதூர் 2 இக்பால் வீதியைச் சேர்ந்த அன்சார் ஆசிரியரின் மகளான நஜீராவை திருமணம் முடித்து இன்று மூன்று ஆண் பிள்ளைகளும்  ஒரு பெண் குழந்தைக்கும் தந்தையாக இருக்கும் அனீஸ் குடும்பத்தைவிட கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பலராலும் பாராட்டக்கூடிய விடையமாக இருக்கிறது.

யாரிடமும் எந்த உதவியும் கேட்காது தனி மனிதனாக இருந்து இன்று இவர் செய்திருக்கும் கல்விச்சேவையானது அவர் பிறந்த மூதுர் மாத்திரமல்லாமல் மட்டக்களப்பு மாவட்டம் திருக்கோணமலை மாவட்டம் ஆகியவற்றில் இன, மத வேறு பாடின்றி முஸ்லிம். இந்து, கிறிஸ்தவம் என்று ஏராளமான பட்டதாரிகளை உருவாக்கி பெரும் சாதனை படைத்துள்ளார்.

இப்போது 2 கல்வி நிலையங்களை வைத்து வரிய மாணவர்களுக்கு சிறந்த கல்வியைக்கொடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கும் இவருக்கு இவரின் வருமானம் ஈடுகொடுக்காத நிலை இருக்கிறது. தனவந்தர்கள் , அரசியல்வாதிகள் உதவிகள் செய்தால் மூதூர் மாத்திரம் அல்ல முழு இலங்கையிலும் இருக்கின்ற மாணவர்கள் அனைவரும் பிரயோசனம் பெறும் அளவுக்கு இவரது கல்விச்சேவை இருக்கும் என்பதில் எவ்வித ஐய்யமும் இல்லை.

தரம் -03 தொடக்கம் பட்டப்படிக்கு வரை கற்பிக்கும் இவர் சவால்விட்டுக் கூறும் விதம் வியப்பூட்டுகிறது. நான் கற்பிக்கும் முறையில் நான் கேட்கும் வினாவில் 75 வீதத்துக்கு மேல் பரீட்சை வினாத்தாளில் கேள்வியாக வரவில்லை என்றால் நீங்கள் சிலவு செய்த பணங்களை முழுவதுமாக திருப்பித் தருவேன் என்று தைரியமாகக் கூறுகிறார்.

இதுவரை 100 க்கு மேற்பட்ட கல்விசார் அரசியல் அறிவியல், புவியியல், வரலாறு போன்ற புத்தகங்களை எழுதி சாதனைபடைத்துள்ள இவர் இன்று கவலையுடன் கூறுவது நான் கஷ்டப்பட்டு எழுதும் புத்தகம் அனைத்து மாணவர்களிடமும் கிடைக்கவேண்டும் அனைவரும் கல்வியில் முன்னேற வேண்டும் அதற்கு என் புத்தங்களை வெளியிட யாரும் முன் வருகிறார்கள் இல்லையே என்னும் ஆதங்கம் இவரிடம் இருக்கிறது.

இன்று 740 க்கு மேலான பட்டதாரிகள் இவரிடம் இருந்து கல்வி கற்ரு வெளியேறி இன்று திறமைசாலிகளாக வலம்வருகிறார்கள் அவர்களைப்போல ஆரம்பத்தில் இருந்து பட்டப்படிப்புவரை அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த கல்வி வழங்க இலங்கை அரசாங்கம் நல்ல சிந்தனைகளைக் கொண்டுவந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பிள்ளைகள் கல்வியை இடைநடுவில் விட்டு விடுகிறார்கள் அவர்களின் கல்வியை விடாமல் எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் இலவசமாக மேலதிக வகுப்புக்களும் இடம்பெற வேண்டும் அதற்காக எமது அல்-ஹிக்மா என்னும் பட்டப்படிப்பு நிலையம் உதவக் காத்திருக்கிறது.

ஆனால் இங்குள்ள அரசியல்வாதிகள், தனவந்தர்கள் இனிமேலாவது எங்கள் கல்வி நிலையத்துக்கு உதவுவார்களா? ஏழை மாணவர்காளின் கல்விக்கு ஒளிவூட்டுவார்களா..? என்று எதிர்பார்ப்புடன் இருக்கும் அனீஸை அவரது மூதூர் இல்லத்திற்குச் சென்று சந்தித்த இம்போட்மிரர் ஊடக வலையமைப்பின் தேடுதல் குழுவினர் அங்கு கண்ட விடையங்களை உங்களுடன் பகிர்ந்துள்ளார்கள் நீங்களும் உங்கள் பிள்ளைகள் மாணவர்களும் சிறந்த முறையில் கல்வியைத்தொடர இவரிடம் இருந்து புத்தகங்களைப்பெற்றுக்கொள்ளுங்கள் இம்போட்மிரர் வாசகர்களுக்கு சலுகையுடன் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அனீஸ் ஆசிரியர் கூறியிருக்கிறார் அவரை தொடர்பு கொள்ள விரும்புவோர். -

மற்றும் கலாநிதி அனீஸ் ஆசிரியர் எழுதும் கல்வி நூல்கள் பரீட்சையில் 75% வினாவாக வரவில்லை என்றால் குறிப்பிட்ட கல்விக்கு சிலவு செய்த பணத்தை மொத்தமாக திருப்பி ஒப்படைபேன் என்று கூறுகிறார்.
அப்படி ஒரு திறமைவாய்ந்த ஆசான் எழுதும் புத்தகங்களை நீங்கள் உங்கள் பெயரில் வெளியிட வெளியிட்டு விற்பனை செய்ய கல்விக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா.. தொடர்பு கொள்ளுங்கள் ..

சாமஸ்ரீ தேசகீர்த்தி, தேசமான்ய, வித்யா சூரி, கலாநிதி எஸ்.எம்.எம்.அனீஸ் -0770343243.



கொட்டியாபுரபற்று வரலாறு எழுதிய ஆசிரியர் சமட் 2003 ஆண்டில் எழுதிய நூலில் ஆசிரியர் கலாநிதி அனீஸ் பற்றி குறிப்பிட்டுள்ளார்.







ஆசிரியர் அனீஸ் மாணவர்களிடம் விடும் சவால்.


மேலதிக வகுப்புகளுக்கான இடம்:

பட்டப்படிப்பு நிலையம்:


தரம் -03  மாலை நேர வகுப்புக்கள்



ஆசியரியர் கலாநிதி அனீஸ் வெளியிட்டுள்ள நூல்களின் சில...



பட்டம் பெற்ற மாணவர்களில் சிலர்:
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :