மர்ஹும் அஷ்ரபையும், ஹக்கீமையும் விமர்சிக்கும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல

மைச்சர்களான தொண்டமான், ஹக்கீம் போன்றவர்கள் தேர்தல் நெருங்கும் போது ஏதோ ஒரு அரசியல் அணியில் இணைந்து கொண்டு தமது கட்சிக்கான வேட்புமனுக்களை பெற்றுக் கொள்வதாகவும் இதனால் ஆரம்பத்தில் இருந்து கட்சிக்காக பாடுபட்டவர்கள் ஒதுக்கப்படுவதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பிரதான அரசியல் கட்சிகள் மலையகத்தில் தொழிற்சங்களை ஆரம்பித்து பல்வேறு வேலைகளை முன்னெடுத்தாலும் தேர்தல் ஒன்று நெருங்கும் போது மலையகத்தில் தொண்டமான் போன்றவர்களுடன் கூட்டணிகளை ஏற்படுத்துவதால், பிரதான அரசியல் கட்சிகளில் உள்ளவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

தொண்டமான் ஏதோ ஒரு அரசியல் அணியில் இணைந்து கொள்வார். அதேபோல் தற்பொழுது திகாம்பரமும் உள்ளார்.

இனவாதமாக பார்க்கும் போது ஹக்கீமும் உள்ளார்.அந்த காலத்தில் அஷ்ரப் இருந்தார்.

இவர்கள் எங்காவது சென்ற ஒரு அரசியல் கட்சியில் இணைந்து கூட்டணி அமைத்த பின்னர், பிரதான கட்சிகள் பல வருடங்களாக மேற்கொண்ட சகல வேலைகளையும் ஒரு புறம் போட்டு விடுகின்றன.

தொண்டமான் போன்றோர் கூட்டணியில் இணைந்து கொண்ட பின்னர் அவர்கள் சொல்வது போல் வேட்புமனுக்களை வழங்கி, அவர்கள் சொல்வது போல் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள்.

கட்சிக்காக பல காலம் பாடுபட்டவர்கள் ஒதுக்க வைக்கப்பட்டு, அவர்களை மறந்து விடுவார்கள். அவரை சந்தித்து பேசி கொள்ளுங்கள் என்று கட்சியினருக்கு கூறுவார்கள்.

கடந்த காலங்களில் இதனை தான் நாங்கள் கண்டோம். எனினும் இந்த நிலைமையை மாற்ற ஜனாதிபதியினால் முடிந்துள்ளது.

அமைச்சர் தொண்டமான் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் இரவு 2 மணிக்கு பொரள்ளை பொலிஸ் நிலையத்திற்கு சென்று அடாவடியில் ஈடுபட்டு, பொறுப்பதிகாரியின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு ரணில் விக்ரமசிங்க வரும் வரை நான் இங்கிருந்து எழ மாட்டேன் என்று கூறியது எமக்கு நினைவில் உள்ளது.

இதனையடுத்து ரணில் விக்ரமசிங்க எங்களுடன் பேசி அங்கு சென்று எப்படியாவது தொண்டாவை சமாதானப்படுத்துங்கள் என்று கூறினார். நாம் அந்த நிலைமைக்கு தள்ளப்படுவோம்.

இதேபோல் எனது நண்பர் தொண்டமான் தனது பழைய வேலையை ஜனாதிபதியிடம் காட்டினார். ஜனாதிபதிக்கு தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார்.

24 மணிநேரத்தில் கடிதத்தை திரும்பபெறவிட்டால் அதனை நான் ஏற்றுக்கொள்வேன் என ஜனாதிபதி கூறினார்.

இதன் பின்னர் பெட்டி பாம்பாக அடங்கி போன தொண்டமான் அந்த கடிதத்தை திரும்பபெற்றார். முன்னர் என்றால் தொண்டமான் அப்படி கடிதத்தை திரும்ப பெற்றிருக்க மாட்டார் என்றார்.JM 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :