பொது பல சேனா தலைமையகம் சிங்களமக்களால் முற்றுகை- படங்கள் இணைப்பு


கொழும்பு தும்மூல சந்தியில் அமைந்துள்ள பொது பல சேனா அமைப்பினரின் தலைமையகம் சம்புத்தத்வ ஜெயந்திக்கு முன்னால் அந்த அமைப்புக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றைய தினம் மாலை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக்க சிறிவர்த்தன விடிவெள்ளியிடம் தெரிவித்தார்.
 
இன்று மாலை குறித்த பிரதேசத்துக்கு வருகைதந்த சிங்கள பெளத்தர்களாலேயே இந்த எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
 குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக ஏற்பட்ட சிறு அமைதியின்மையை தொடர்ந்து  அங்கு பொலிசார் தலையிட்டதாகவும் பின்னர் அது சுமுகமாக தீர்க்கப்பட்டு ஒன்றுகூடியவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
 பொது பல சேனாவின் நடவடிக்கைக்கு  எதிராக போதி பூஜை நடத்த தாங்கள் வருகைதந்ததாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும் அவர்கள் அமைதி அதிஷ்டான பூஜையை நடத்த முற்பட்ட வேளையிலேயே குறித்த சலசலப்பு ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
 இதனிடையே  பொது பல சேனாவின் செயற்பாடுகளையும் அவர்களின் தலைவர்களையும் கண்டித்து குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக அறியமுடிகிறது.
 குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொது பல சேனாவின் தேசிய அமைப்பாளர் டிலந்த விதானகேவும் விடிவெள்ளியிடம் கருத்து தெரிவித்தார்.
 அவர் கருத்து தெரிவிக்கையில்,
 பொது பல சேனாவின் நடவடிக்கைகளுக்கு எதிரான  பெளத்தர்கள் என்ற குழுவினரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தேசிய கீதத்தை திரிவுபடுத்தி பாட முற்பட்டனர். இதன்போது எமக்கு எதிராக எதிர்ப்பைக் காட்டுமாறும் தேசிய கீதத்தை திரிவுபடுத்த வேண்டாம் எனவும் நாம் கூறினோம்.
 எங்களுக்கு கிடைத்த தகவலின் படி அதில் பெளத்தர்கள் மட்டும் இருக்கவில்லை. அநேகமானவர்கள் முஸ்லிம் மற்றும் கத்தோலிக்கர்கள். ஐக்கிய  நாடுகள் சபையின் தூதரகத்துடன் தொடர்புடையவர்களே இதன் பின்னணியில் உள்ளதாக தெரியவருகிறது. என தெரிவித்தார்.
 இதனிடையே இன்று மாலை பொது பல சேனா தலைமையகம் முன் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில் பம்பலபிட்டி பொலிஸ் நிலையத்தில் அந்த அமைப்பினரால் முறைபாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
 அந்த அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரான டிலந்த விதனானக்கே உள்ளிட்ட குழுவினரால் குறித்த முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. அரசுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் தேசிய கீதத்தை திரிவுபடுத்த முனைந்தமை தொடர்பில் குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
 முன்னதாக இன்றையதினம் பொது பல சேனா அதன் தலைமையகத்தில் புதுவருடத்தை முன்னிட்டு போதி பூஜை ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :