சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் உலக மனநல தின விழிப்புணர்வு நிகழ்வு



நூருல் ஹுதா உமர்-
உலக மனநல தினத்தை முன்னிட்டு, மாணவர்களின் மனநல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் உளநெருக்கீடு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு, சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எம்.எம். ஹிர்பஹான் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதி அதிபர்களான எம்.எஸ். நபார், எம்.ஏ.எம். சிறாஜ் மற்றும் ஆலோசனை வழிகாட்டலுக்குப் பொறுப்பான ஆசிரியர் யு.கே.எம். முபாரக் ஆகியோர் கலந்துகொண்டு தமது வாழ்வியல் அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.

நிகழ்வின் வளவாளராகக் கலந்துகொண்ட கல்முனை உப பிரதேச செயலகத்தின் உளவளத் துணை உத்தியோகத்தர் திருமதி கே. சந்திரகுமார், உளநெருக்கீட்டுக்கான காரணங்கள், அதனை முகாமைத்துவம் செய்யும் வழிமுறைகள் மற்றும் மன அமைதியைப் பேணுவதற்கான பயிற்சிகள் தொடர்பில் விளக்கமளித்தார்.

மாணவர்கள் தமது வாழ்வில் எதிர்கொள்ளும் மனநெருக்கீடுகளைச் சரியான முறையில் கையாளுதல், உணர்வுகளைப் புரிந்துகொள்ளுதல், பிறரின் அனுபவங்களுக்குச் செவிசாய்த்தல் மற்றும் மனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆண்டுதோறும் ஒக்டோபர் 10ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக மனநல தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற இவ்விழிப்புணர்வு நிகழ்வு, மாணவர்களிடையே ஆரோக்கியமான சிந்தனைகளையும் நேர்மறையான வாழ்க்கை அணுகுமுறைகளையும் வளர்ப்பதற்கு உதவியாக அமைந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :