(பகுதி - 01)
: TLM. பாறூக் (அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்தி குழு முன்னாள் உறுப்பினர்)
1988 நவம்பர் காலப்பகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.எம். மன்சூர் அவர்களின் வேண்டுகோளின் பேரில் ஆர். பிரேமதாச அவர்களினால் மகேப்பேற்றுமனை திறந்து வைக்கப்பட்டது. அப்போதைய காலகட்டத்தில் சிறிய அளவிலான மருத்துவ சேவை தான் அதனால் வழங்கக்கூடியதாக இருந்தது. அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் முதல் நீலாவணை வரை மறுபுறம் இறக்காமம் வரை உள்ள மக்களுக்கு சத்திர சிகிச்சை செய்வது வைத்திய சேவைகளை நிறைவேற்றுவது போன்ற விடயங்களுக்கு மாவட்டதில் ஒரு பெரும் வைத்தியசாலை இல்லாத குறை இருந்தது.
அந்த காலம் பயங்கரவாத காலம் என்பதால் மட்டக்களப்பு பொது வைத்தியசாலைக்குச் செல்வது இரவு மட்டுமல்ல, பகலிலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அபாயகரமான சூழ்நிலை இருந்தது. எனவே அம்பாறை மாவட்டத்தில் ஒரு VOG (மகப்பேற்று மருத்துவ நிபுணர்) ஒருவர் கூட இல்லாத சூழ்நிலையில், மக்கள் பெரும் துன்பத்திலும், சேகத்திலும் இருந்தனர். வசதியுள்ளவர்கள் கொழும்பு வைத்தியசாலைக்குச் செல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் வசதி குறைந்த மக்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்த போது 1994ல் ஆட்சி மாற்றம் வந்தது. மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் பலமிக்க அமைச்சராக மாறினார். அவர் அமைச்சராக மாறிய பின்பு, இந்த பகுதி மக்கள், அம்பாறை பிரதேசத்தில் உள்ள கட்சி முக்கியஸ்தர்கள், ஊர் பெரியவர்கள், தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் உடைய கவனத்துக்கு பெரும் வைத்தியசாலை ஒன்றை கல்முனை தொகுதியில் உருவாக்க வேண்டும் என்று விரும்பி எடுத்துரைத்தனர்.
அந்த நேரத்தில் கல்முனையில் ஆதார வைத்தியசாலையும், அடுத்தது கல்முனை மகப்பேற்றுமனையும் இருந்தது. இவற்றை இணைத்து ஒரு பெரும் வைத்தியசாலையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தலைவர் அஷ்ரப்புக்கு உருவாகியது. அப்பொழுது இந்த மகப்பேற்றுமனை வைத்தியசாலை சூழலானது மகப்பேற்றுமனை அமைக்க முன்னர் மாடு அறுக்கும் மடுவமாக இருந்தது. அதே நேரம் அதன் தென்பகுதியில் ஒரு ஆயுர்வேத வைத்தியசாலை இருந்தது. அது கேட் முதலியார் எம்.எஸ். காரியப்பர் அவர்கள் கட்டிய வைத்தியசாலை. அதில் "கொக்கு பரிசாரி" எனும் ஒருவர் வைத்தியராக கடமையாற்றினார். அதே நேரம் முன்னாள் எம்.பியாக இருந்த எம்.சி. அகமது அவர்கள் ஒரு கட்டிடம் கட்டி அதில் ஒரு சிறு வாசிகசாலை இயங்கியது.
மடுவத்துக்கு வடக்கு பகுதியில் பள்ளிவாசலுக்கு சொந்தமான காணியை ஆலீம் காக்கா என்பவர் கையகப்படுத்தி வைத்திருந்தார்) பின்னர் ஹபீப் முஹம்மட் ஹாஜியார் சமரசம் செய்து அதை மீள அவர் பள்ளிவாசலுக்கே கையளித்தார்) இப்படியான சூழலில் அன்றைய நிலைமை இருந்தது. எனவே தலைவரிடம் இந்த வைத்தியசாலை உருவாக்க முனைந்த குழுவில் மிக முக்கியமாக வைத்தியசாலை அபிவிருத்தி குழு என்ற ரீதியில் முதலாவது அதன் தலைவராக மர்ஹூம் அன்பு மொய்தீன் அவர்கள் இருந்தார். அந்த குழுவில் சகோதரர் அமீரலி, மர்ஹூம் தமீம் ஹாஜியார் (சென்ட்ரல் ஹாட்வயார்), மர்ஹூம் நஜீம், நான் (டி.எல்.எம்.பாறூக்), உதுமான் அலி அதிபர், றபீக் மௌலவி, எம்.எஸ்.எம். சத்தார் (முன்னாள் மாநகர சபை உறுப்பினர்) உட்பட பலர் இருந்தனர். இதன் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக Dr. A.L.M. ஜெமீல், Dr. A.L.M பைலுர் ரஹ்மான், Dr. லியாகத் அலி, Dr.M நஸீர் போன்றோர்களும் இருந்தார்கள்.
தலைவர் அவர்கள் இன ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு, கல்முனையில் சகல மக்களும் பயன்பெறக்கூடிய ஒரு பொது வைத்தியசாலையை உருவாக்கும் நோக்கில், 1995.ஜுலை.14 அன்று கல்முனை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் முருகானந்தம் மற்றும் அவர்களின் அபிவிருத்தி குழுவுடன் பேசி கல்முனை ஆதார வைத்தியசாலையுடன் மகப்பேற்று மனையையும் சேர்த்து அன்றிருந்த சுகாதார அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி அவர்கள் கல்முனையின் இரு வைத்தியசாலைகளையும் இணைத்து ஒரே வைத்தியசாலையாக சுகாதார அமைச்சினால் இணைத்து ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
அன்றிருந்த கல்முனை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி குழு திடீரென ஆர்ப்பாட்டங்கள் செய்து, எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியதால் 1994 ஜூலை 22ம் திகதி அந்த தீர்மானம் ரத்து செய்யப்பட்டது. இருந்தாலும் அவ்வருடம் ஆகஸ்டில் தலைவர் அஸ்ரப் அவர்கள் சுகாதார அமைச்சில் இறுதியாக அன்றிருந்த கல்முனை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி குழு மற்றும் தமிழ் புத்திஜீவிகளை அமைச்சுக்கு அழைத்து அன்றிருந்த சுகாதார அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி அவர்களின் தலைமையில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் தலைவர் அஸ்ரப் அவர்கள், இரு வைத்தியசாலைகளையும் இணைத்து செயற்படும் போது பெரிய பொது வைத்தியசாலையாக மாற்றமுடியும். அதற்கான கட்டிடங்களை உருவாக்க முழு நிதியையும் எனது அமைச்சினூடாக தருகிறேன் என மக்களின் நலனுக்காக மிகவும் உணர்வுபூர்வமாக கல்முனை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி குழுவிடம் கேட்டார்.
அப்போது அவர்கள் தலைவரின் முகத்திற்கு நேராகவே சொன்னார்கள் உங்கள் அமைச்சின் நிதியும் வேண்டாம், கட்டிடங்களும் வேண்டாம், உபகரணங்களும் வேண்டாம். மகப்பேறு மனையை இணைக்க வேண்டாம் என்று விடாப்பிடியாக இருந்தார்கள். தலைவர் எவ்வளவு இறங்கி வந்து கதைத்தும் அவர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை. இதனால் தலைவரின் முகம் சிவந்தது. சரி, கூட்டத்தை முடிப்போம் என்று கூறி கல்முனை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக்குழு அங்கிருந்து அகன்ற பின்னர்......
அமைச்சர் பௌஸி அவர்களிடம், இவர்கள் நடந்துகொண்ட விதம் தனக்கு அதிருப்தியளிப்பதாகவும் மகப்பேற்று மனை அமைந்துள்ள இடத்தில் கரையோர பல்லின மக்களின் நன்மைகருதி முழுமையான வைத்தியசாலை ஒன்றை அமைக்கவுள்ளதாகவும், அதற்கான நிதியை தனது அமைச்சூடாக வழங்கி முழுமையான வைத்தியசாலையை உருவாக்க அனுமதி வழங்குமாறு கோரினார். அதற்கு அமைச்சர் பௌசியும் தனது சம்மதத்தை தெரிவித்தார். இந்த கூட்டத்தில் தலைவரின் முகம் விகாரமடைந்து சிவப்பாக மாறியது.
அமைச்சர் பௌசியுடன் நடந்த கூட்டத்தில் தலைவர் அவர்கள் அஸ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையின் நன்மை கருதி எச்.எம். அமீர் அலி அவர்களிடம் கூறினார். இன்றிலிருந்து நீங்கள் தான் இந்த அபிவிருத்தி குழுவுக்கு தலைமை தாங்கி இந்த வைத்தியசாலையை குறுகிய காலத்தில் தன்னிறைவான வைத்தியசாலையாக மாற்ற வேண்டும் என்று. இங்கு அமீர் அலிக்கு அமைச்சர் பௌசியை அறிமுகம் செய்து அமைச்சர் பௌசியிடம் அமீரலி கேட்கும் விடயங்களை செய்துகொடுக்க வேண்டிக்கொண்டார்.
அபிவிருத்தி குழு முக்கியஸ்தர்களாக இருந்த எச்.எம். அமீர் அலி (முன்னாள் இராஜாங்க அமைச்சராக இருந்த ஹரீஸ் அவர்களின் சகோதரர்), டாக்டர் ஏ.எம். நஸீர், டாக்டர் ஏ.எல்.பைலுர் ரஹ்மான், மர்ஹூம் கவிஞர் அன்பு முகைதீன், நான் (பாறூக்), மர்ஹூம் நஸீம், மர்ஹூம் தமீம் ஹாஜியார் (சென்ட்ரல் ஹாட்வயார்) எம்.எஸ்.எம்.சத்தார் (கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்) முன்னாள் அதிபர் உதுமான் அலி, றபீக் மௌலவி, போன்ற பலரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி குழு முன்னிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. முகமெல்லாம் சிவந்து கடும் கோபத்துடன் இருந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் அமைச்சர் பௌசியிடம் "இந்த வைத்தியசாலையை அம்பாறை கரையோர மக்களுக்கு ஒழுங்காக மருத்துவம் செய்யும் முழுமையான வைத்தியசாலையாக உருவாக்க வேண்டும். இந்த அபிவிருத்தி குழு கேட்கும் விடயங்களை உடனடியாக செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்தில் கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட மாணவராக அப்போது இருந்த எச்.எம்.எம். ஹரீஸ் (முன்னாள் இராஜாங்க அமைச்சர்) அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
மகப்பேற்றுமனையாக இருந்த இந்த வைத்தியசாலை அன்று இரவே சுற்றியல் கூர் (Peripheral Hospital) வைத்தியசாலையாக மாற்றப்பட்டு ஒரு மாதத்தில் மாவட்ட வைத்தியசாலையாக அமைச்சர் பௌசியினால் தரமுயர்த்தப்பட்டது. மகப்பேற்று மனையை முழுமையான வைத்தியசாலையாக மாற்ற, தலைவரின் அமைச்சின் நிதி, சுகாதார அமைச்சின் நிதி உள்ளிட்ட பல்வேறு நிதி ஒதுக்கீடுகளின் மூலம் மளமளவென புதிய கட்டிடங்களை சகோதரர் அமீரலி அவர்கள் தலைமையிலான அபிவிருத்தி குழு நிர்மாணிக்கத் தொடங்கினர். அந்த காலகட்டத்திலும், அதன் பின்னரும் சகோதரர் அமீரலியின் இரவுபகல் பாரத பங்களிப்பு அளப்பரியதாக அமைந்திருந்து. வர்த்தக நடவடிக்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு இந்தப்பணிக்காக முழுமையாக தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.
1996 காலப்பகுதியில் இவ்வைத்தியசாலையை மேலும் விஸ்தரிக்க காணித்தேவை ஏற்பட்ட போது பிரதான வீதியில் அமைந்திருந்த கல்முனை முஹைய்யதீன் ஜும்மா பெரியபள்ளிக்கு சொந்தமான காணியை அப்போதைய தலைவராக இருந்த பெரியதம்பி முதலாளி (முன்னாள் எம்.பி ஹரீஸ் அவர்களின் தந்தையான ஹபீப் முஹம்மட் அவர்கள்) தலைமையிலான நம்பிக்கையாளர் சபையினர் சமூகத்தின் நன்மைக்காக துணிந்து இவ்வைத்தியசாலைக்கு வழங்கினர். அதன்பின்னரே இவ்வைத்தியசாலை கட்டியெழுப்பப்பட்டது.
பகுதி 02 இல் தொடர்வோம்......
TLM. பாறூக்
முன்னாள் உறுப்பினர்
வைத்தியசாலை அபிவிருத்தி குழு
அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை
அலியார் வீதி, கல்முனை

0 comments :
Post a Comment