Voice of Maruthoor- சாய்ந்தமருது தனி நகர சபை அமைப்பை துரிதப்படுத்துமாறு கோரிக்கை



சாய்ந்தமருது தனி நகர சபை அமைப்புக்கான பூர்வாங்க நிர்வாக ஏற்பாடுகளை உடனடியாக விரைவுபடுத்துமாறு Voice of Maruthoor அமைப்பு அரசாங்கத்தையும் உரிய அமைச்சுக்களையும் வினயமாகக் கேட்டுக்கொள்கிறது.

கடந்த சுமார் 30 ஆண்டுகளாக கல்முனை மாநகர சபையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்த சாய்ந்தமருது பிரதேச மக்கள், தனித்துவமான உள்ளூராட்சி சபை ஒன்றைப் பெறும் நோக்கில் பல்வேறு ஜனநாயகப் போராட்டங்களையும் சட்டரீதியான முயற்சிகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் சாய்ந்தமருது பகுதி கல்முனை மாநகர சபையிலிருந்து பிரிக்கப்பட்டு, தனியான நகர சபை வழங்கப்பட வேண்டும் எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு கிடைத்துள்ளது. இது சாய்ந்தமருது மக்களின் நீண்டகால ஜனநாயகக் கோரிக்கைக்கு கிடைத்த நீதியான அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

எனினும், நகர சபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக பல முக்கியமான பூர்வாங்க மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் நிலவுகிறது. அவற்றில் முக்கியமானவை:
நகர சபைக்கான நிர்வாக கட்டமைப்பை உருவாக்குதல்
வட்டார எல்லைகளை உறுதிப்படுத்தி தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுதல்
ஒவ்வொரு வட்டாரத்திற்கும் உத்தியோகபூர்வ பெயர்களை வழங்குதல்
நகர சபை அலுவலகத்திற்கான பொருத்தமான இடத்தை அடையாளப்படுத்துதல்
அடிப்படை நிர்வாக மற்றும் பொதுச் சேவை வசதிகளை ஏற்படுத்துதல்

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் துரிதமாகவும் திட்டமிட்ட முறையிலும் முன்னெடுக்கப்படுவது அவசியமாகும்.

எனவே, சாய்ந்தமருது மக்களின் நீண்டகால அபிலாஷைகளையும் ஜனநாயக உரிமைகளையும் கருத்தில் கொண்டு, மேற்குறிப்பிட்ட பூர்வாங்க நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பித்து தேவையான நிர்வாக மற்றும் சட்டரீதியான ஏற்பாடுகளை விரைவாக நிறைவேற்றுமாறு Voice of Maruthoor அமைப்பு அரசாங்கத்தையும் உரிய அமைச்சுக்களையும் பணிவுடன் வலியுறுத்துகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :