பாணமை சந்தியில் உகந்தைக்கான திசை நிர்ணய வீதி அறிவித்தல் பலகை இல்லை; நடவடிக்கை எடுக்குமா வீதி அபிவிருத்தி அதிகாரசபை?


வி.ரி. சகாதேவராஜா-

ம்பாறை மாவட்டத்தின் பாணமை சந்தியில் இருந்து , காட்டிற்குள் இருக்கும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை முருகன் ஆலயம் நோக்கிச் செல்லும் பிரதான வீதிக்கான திசை நிர்ணய வீதி அறிவித்தல் பலகை இதுவரை பாணமைச் சந்தியில் நிறுவப்படவில்லை என பக்தர்களும் பொதுமக்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.

பாணமை சந்தியிலிருந்து உகந்தமலை ஆலயத்திற்குச் செல்லும் பாதை பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

குறிப்பாக வருடாந்த உற்சவ காலங்களிலும் கதிர்காமம் பாதயாத்திரை நடைபெறும் நாட்களிலும் ஆயிரக்கணக்கான மூவின பக்தர்களும் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர்.

எனினும், உகந்தமலை ஆலயத்திற்கான திசை நிர்ணய அறிவிப்பு பலகை இல்லாத காரணத்தால் வெளிமாவட்டங்களிலிருந்து வருவோர் மற்றும் முதல் முறையாக வருகை தரும் யாத்திரிகர்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், பாணமை சந்தியில் இருந்து உகந்தமலை முருகன் ஆலயத்திற்கான வீதி அறிவித்தல் பலகையை உடனடியாக நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளரும் சமய ஆர்வலருமான கண.இராசரத்தினம் (கண்ணன்) கூறுகையில்.. பாணமைச் சந்தியில் மாத்திரம் அல்ல, அதனை அடுத்து வருகின்ற கண்ணகை அம்மன் கோயில் சந்தியிலும் கூமுனை சந்தியிலும் இதனை நிறுவினால் மக்களுக்கு பேர் உதவியாக இருக்கும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :