சுவிஸ் உதயம் தமிழ் அமைப்பினால் மாத்தளை சிங்கள மாணவர்களுக்கு கணினிகள்.


வி.ரி. சகாதேவராஜா-

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் மாத்தளை கல்வி வலயத்திற்குட்பட்ட முகந்தெனிய சிங்கள வித்தியாலய மாணவர்களின் கல்விச்செயற்பாடுகளுக்காக இரண்டு கணிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு நேற்று 20 ஆம் திகதி புதன்கிழமை சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் அப்பாடசாலையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளரும் இலங்கைக்கான இணைப்பாளருமான சமூகசேவகர் க.துரைநாயகம், செயலாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன், பொருளாளர் எஸ். கருஸ்ராஜ், உபதலைவர் ஒய்வு நிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் கண வரதராஜன், பிரதிச்செயலாளர் ஊடகவியலாளருமான சா.நடனசபேசன், உறுப்பினர்களான அதிபர் இ.ஜீவராஜ் கண்ணன் பாடசாலையின் அதிபர் கே.ராமநாயக்க மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :