மருதமுனை நகர சபை தொடர்பில் விசேட கலந்துரையாடல்!


நூருல் ஹுதா உமர்-

ருதமுனைக்கு தனியான நகர சபையை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடல், தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபை மேயரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுள்ளாஹ் அவர்களுடன் அவரது முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, மருதமுனைக்கான நகர சபையை சாத்தியப்படுத்துவதற்கான முன் ஆயத்த வேலைத்திட்டங்கள், சட்ட மற்றும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், இந்நடவடிக்கைகளின் அடுத்த கட்ட செயற்பாடுகளை ஒருங்கிணைப்பது குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. இக்கலந்துரையாடலில் மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் அமையத்தின் உறுப்பினர்கள், சமூக முக்கியஸ்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதேவேளை, சாய்ந்தமருது நகரசபை தொடர்பான வழக்கில் இடைமனுதாரர்களாக மருதமுனை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :