நெடுந்தீவின் அபிவிருத்திகள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறப்பாக முன்னெடுக்கும் - யாழ்.சு.கபிலன்

க.கிஷாந்தன்-

நெடுந்தீவு தனக்கான தனித்துவத்துடன் வாழ்வதற்கு வழிவகுக்கும் வகையில் அத்தனை முயற்சிகளையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் என்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளரும், யாழ்.மாநகர சபை உறுப்பினருமான சு.கபிலன் தெரிவித்தார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக,984.73 மில்லியன் ரூபா மதிப்பில் குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்பின் இரண்டாவது கட்டப் பணிகள் இன்று 22.04.2026 அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாணத்தில் உள்ள அத்தனை தீவுகளையும் மையப்படுத்தியதாக போக்குவரத்து அபிவிருத்தி இடம்பெறும்.

தேசிய மக்கள் சக்தி என்ற மக்கள் அரசாங்கமானது, வடக்கு அபிவிருத்தியில் அதிக கரிசணை காட்டி வருகின்றது. கடந்த காலங்களை விடவும் வடக்கு அபிவிருத்திக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகின்றது.

குறிப்பாக வடக்கு வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கும் முக்கியத்துவம் வழங்கி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாகவும் வடக்குக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவென்பது மூலிகைகளைக் கொண்டிருந்த ஒரு தீவாகும். எனவே, இங்கு மாதிரி மூலிகை கிராமமொன்றை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

நெடுந்தீவு ஒரு மீன்பிடி துறைமுக கிராமம். அங்கு மீன்பிடிதுறை அமைக்குமாறு கோரப்பட்டுள்ளது. விளையாட்டு அபிவிருத்திக்காகவும் நிதி கோரி திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவில் நெல் உற்பத்தி மற்றும் தானிய உற்பத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது. கிணறுகள் மக்கள் பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படுவதில்லை. அவற்றை விடுவிப்பது பற்றி பேசப்படுகின்றது.

நெடுந்தீவு தனக்கான தனித்துவத்துடன் வாழ்வதற்கு வழிவகுக்கும் வகையில் அத்தனை முயற்சிகளையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :