இது பற்றி உலமா கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் முப்தி தெரிவித்ததாவது,
சஜித் கம்மன்பிலவின் கூட்டத்துக்கு சென்று மகிழ்ந்திருந்ததை எதிர்த்து ஊடகத்தில் மட்டும் ரிசாத் பேசினால் போதுமா என கேட்க வேண்டியுள்ளது.
இவ்வாறு பேசிவிட்டு கையறு நிலையில் ரிசாத் பதியுதீன் இருக்க காரணம் அவர் தன் சொந்த கட்சி மூலம் பாராளுமன்றம் போகாமல் சஜித் கட்சி சின்னத்தில் வெற்றி பெற்றதாகும்.
தனிக்கட்சித்தலைவர் தன் சொந்தக்கட்சியில் வெல்ல முடியாமல் பேரின கட்சியில் இணைந்துதான் வெல்ல முடியும் என்ற கேவலத்தை விட தனிக்கட்சியில் போட்டியிட்டு தோற்பது பெருமையானதாகும்.
தனிக்கட்சியாக பாராளுமன்றத்தில் இருந்து கொண்டு ஆளும் அரசுக்கு அல்லது எதிர் கட்சி அரசியலுக்கு ஆதரவு தெரிவிப்பதே முஸ்லிம் சமூகத்தின் தன் மான அரசியலாகும்.
அப்படி இல்லாமல் பேரின கட்சியின் எம்பியாக இருந்தால் அக்கட்சி தலைமைகள் செய்யும் நம் சமூகத்துக்கு எதிரான விடயங்களுக்கு அரசியல் ரீதியிலான நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால்தான் அஷ்ரப் தனிக்கட்சி சிந்தனையை வளர்த்தார்.
அவர் தனது அச்சிந்தனைக்கு எதிராக அவரே சிங்கள கட்சியின் சின்னத்தில் இறங்கிய போது அச்சிந்தனை பிழை என காட்டுவதற்காக இறைவன் அத்தேர்தல் முடியுமுன்பே தன்னிடம் அஷ்ரபை அழைத்துக்கொண்டான்.
உதய கம்மன்பில ஒன்றும் கவிதை நூல் வெளியிட சஜித்தை அழைக்கவில்லை. ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமான நூல் வெளியீட்டுக்கே அழைக்கிறார் என தெரிந்தும் சென்ற சஜித்தின் இத்தகைய மோசமான நடவடிக்கைக்கு எதிராக ரிசாத் பதியுதீன் எடுக்கும் அரசியல் நடவடிக்கை என்ன?
ஒன்றில் இதை எதிர்த்து தனது கட்சி கூட்டை சஜித் கட்சியிலிருந்து விலக்கிக்கொள்ள வேண்டும் அல்லது சஜித்தின் கட்சி எம்பி பதவி தூக்கி வீச வேண்டும். இதைச்செய்யாமல் ஊடகங்களில் புலம்புவது முஸ்லிம் அரசியலின் கையாலாகா தனமாகும்.
இதே வேளை ரவூப் ஹக்கீம் அமைதியாக இருக்கிறாரே என சிலர் சொல்லலாம். ரவூப் ஹக்கீம் எப்போதும் சுவர் மேல் பூனை என்பதும் அவருக்கு அவரது பதவி மட்டுமே இலக்கு என்பதும், சமூகம் பற்றி அக்கறை இல்லாதவர் என்பதும் எமக்கு தெரியும் என்பதால் வெட்கம் இல்லாத அவர் பற்றி பேசி பலனில்லை.
ஆனால் ரிசாத் பதியுதீன், ரவுப் ஹக்கீமின் மாற்றீடு என்றுதான் நினைத்தோம். அவரும் ஹக்கீமும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை எப்போதோ அறிந்து கொண்டோம்.
முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்
இலங்கை உலமா கட்சி
.jpg)
0 comments :
Post a Comment