வீரமுனை வரலாற்றில் முதல்முறையாக உயர்தர மாணவர்கள் ஐவர் சாதனை



வி.ரி.சகாதேவராஜா-
ம்பாறை மாவட்டத்தின் வீரமுனைக் கிராமத்தில் இருந்து இம்முறை வெளியான க.பொ.த.உயர்தர பெறுபேறுகளின்படி,
வீரமுனை வரலாற்றில் முதல்முறையாக ஒரே தடவையில், நான்கு மாணவர்கள் பொறியியல் பீடத்திற்கும், ஒரு மாணவன் மருத்துவத் துறைக்கும் தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்.

மாணவர்களான ரவிச்சந்திரன் பவதாரூனன்(3A),
தயானந்தம் ரக்சியானந்(3A),
கணபதிப்பிள்ளை மருட்சாயன்
(3A),கணபதிப்பிள்ளை மிவானுஜன்(A,2B) ஆகியோரே பொறியியல் பீடத்திற்கு தெரிவானவர்களாவார்.
இவர்களில் மூவர் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியிலும், ஒருவர் கல்லடி சிவானந்தா வித்தியாலயத்திலும் கல்வி கற்றவர்களாவர்.

மருத்துவத்துறைக்கு
செல்வன் சிவனேசராஜா தனுஜன்
2AB தெரிவானார். இவரும் கல்முனை பற்றிமா தேசிய கல்லூரியில் பயின்றவராவார்.

மேற்படி பேறுபேறுகளை வீரமுனையைச் சேர்ந்த அக்கறையுள்ள கோரக்கர் அதிபர் சோ.இளங்கோவன், பெறுபேறுகள் வெளியான நள்ளிரவில் தெரிவித்தார்.

அதேவேளை, வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய தலைவரும் கிராமசேவை உத்தியோகத்தருமான ஏ.பிரதீபன் கூறுகையில்.. வீரமுனைக் கிராமத்திற்கு பெருமை சேர்த்த இச் சாதனை மாணவர்களை வெகுவிரைவில் பாரிய வரவேற்புடன்கூடிய கௌரவிப்பை நடாத்த திட்டமிட்டுள்ளோம். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :