அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக சட்டத்தரணி ரியாஸ் ஆதம் தெரிவு செய்யப்பட்டமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட கால இழுபறிக்குப் பிறகு கிடைத்த மிகப் பெரிய அரசியல் வெற்றியாகக் கருதப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த வெற்றியை மக்களின் நம்பிக்கைக்கு உரிய முறையில் பயன்படுத்தி, நிந்தவூர் பிரதேச சபையை சிறந்த நிர்வாகத்துடன் முன்னெடுத்து செல்ல தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதே நேரத்தில், நிந்தவூர் பிரதேச மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், புதிய தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து பிரதேசத்தின் அபிவிருத்தி, சேவைகள் மற்றும் மக்கள் நல திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இறுதியாக, நிந்தவூர் பிரதேச சபையின் நிர்வாகம் மக்கள் நலனைக் குறிக்கோளாகக் கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டுமெனவும், அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் ஏ.சி. யஹியாகான், செயலாளர் நாயகம் – ஐக்கிய மக்கள் காங்கிரஸ் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment