மாணவர்களின் நலன் மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, “இக்ராஹ் – ஓதுவீராக” என்ற தொனிப்பொருளின் கீழ், இஸ்லாமிய நெறிமுறைகள், கல்வி விழுமியங்கள் மற்றும் சமூக ஒழுக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கலாச்சாரப் பிரிவின் ஏற்பாட்டில் இந்த கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வு, இவ்வருடத்திற்கான முதலாவது கல்விசார் நிகழ்வாக ஆரம்பிக்கப்பட்டு, மாணவர்களிடையே கல்வி விழிப்புணர்வு, ஒழுக்கம் மற்றும் சமூக பொறுப்புணர்வை வளர்க்கும் நோக்கில் முன்னெடுக்கப்படுகிறது.
இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மத், அக்ஷா பள்ளிவாசலின் தலைவர் ரஹீம் ஹஸன், பிரதேச சபை உறுப்பினர்களான நிஹ்மத்துல்லாஹ், ரஸ்மின்,நகரை சபை உறுப்பினர்களான பாரி, லரி, கட்சியின் உயர்பீட உறுப்பினர் அல்-ஹாஜ் தாரிக், சாளம்பைக்குள கிளை ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் ஜுனைட் மதனி, வவுனியா பள்ளிவாயலின் பேஷ் இமாம் அமீர் ஹாபிஸ், உஸ்தாத் முஜாஹித் முப்தி, ஓய்வுபெற்று முஸ்லிம் விவாக பதிவாளர் முஹைதீன் பிச்சை, தொழிலதிபர்களான நசுருடீன், ரிபாய்டீன் , அல்-ஹாஜ் அலி உள்ளிட்டோருடன் உலமாக்கள் ஊர் பிரமுகர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.














0 comments :
Post a Comment