அமரர் சந்திரதாஸ களபதி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அனுதாபம்


கிழக்கு மாகாண சபையின் தவிசாளரும், முன்னாள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் சந்திரதாஸ களபதி அவர்களின் மறைவு, அரசியல், சமூக மற்றும் பொதுச் சேவை துறைகளுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாக அமைந்துள்ளது.

இந்த துயரமான நிகழ்வையொட்டி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள், நேற்று (15.02.2026) அமரர் சந்திரதாஸ களபதி அவர்களின் அம்பாறையிலுள்ள இல்லத்திற்கு நேரில் சென்று, இழப்பால் கவலையுற்றிருக்கும் அவரது குடும்பத்தினருடன் சந்தித்து ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, அமரர் சந்திரதாஸ களபதி அவர்கள் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் ஆற்றிய சேவைகளை நினைவு கூர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை, அவரது மறைவு நாட்டிற்கும், குறிப்பாக கிழக்கு மாகாண மக்களுக்கும் பெரும் இழப்பாகும் எனத் தெரிவித்தார். மேலும், இந்த துயர நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, எல்லாம் வல்ல இறைவன் அவர்களின் ஆன்மாவுக்கு சாந்தி அளிக்கவும், குடும்பத்தினருக்கு பொறுமையும் தைரியமும் வழங்கவும் பிரார்த்திப்பதாகக் கூறினார்.

இச்சந்திப்பில், கட்சி முக்கியஸ்தர்கள், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டு, தமது அனுதாபங்களைத் தெரிவித்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :