“கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருதில் ரூ. 1 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட பசுமையான கடற்கரை பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு



ரசாங்கத்தின் “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், நாட்டளவில் 100 பசுமையான கடற்கரை பூங்காக்களை (Mini Beach Park Project) அமைக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சாய்ந்தமருதில் ரூ. 1 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட பசுமையான கடற்கரை பூங்கா கடந்த வெள்ளிக்கிழமை (13.02.2026) மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்த கடற்கரை பூங்காவினை கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும், கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் வைபவமாக திறந்து வைத்து, கல்முனை மாநகர சபைக்கு உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

நாட்டின் கரையோரப் பகுதிகளை பாதுகாப்பதோடு, சுற்றுலா வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொதுமக்களின் ஓய்வுநேரப் பயன்பாடு மற்றும் சமூக நலனை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்நிகழ்வில் உரையாற்றிய அபூபக்கர் ஆதம்பாவா தெரிவித்தார்.

மேலும், கரையோரப் பிரதேசங்களை அழகுப்படுத்தி, பசுமை சூழலை உருவாக்குவதன் மூலம் இளைய தலைமுறைக்கு ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழலை உருவாக்குவதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் MM. ஆசிக், கிழக்கு மாகாண கரையோர பாதுகாப்புத் திணைக்கள பொறியியாளர் M. துலஷிதாஸன், கல்முனை மாநகர ஆணையாளர் TM. றாபி, கரையோரம் பேணல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், பிரஜா சக்தியின் தவிசாளர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச செயற்பாட்டாளர்கள், மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த புதிய கடற்கரை பூங்கா அமைக்கப்பட்டதன் மூலம், சாய்ந்தமருது பகுதி மக்கள் ஓய்வுநேரத்தில் சுகமாக நேரம் கழிக்கவும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், கடற்கரைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :