தாருஸ்ஸஃபா டிஜிட்டல் மீடியா நெட்வொர்க் மற்றும் தாருஸ்ஸஃபா சமூக அபிவிருத்தி அமைப்பின் உத்தியோகபூர்வ டி-ஷர்ட் அறிமுக விழா அமைப்பின் பிரதானி உஸ்தாத் ஏ.ஆர். சபா முஹம்மத் (நஜாஹி) அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
அமைப்பின் ஊடக மற்றும் சமூக சேவை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட இவ்விசேட டி-ஷர்ட், அமைப்பின் அடையாளம், ஒற்றுமை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் 'பார்ட்னர்ஸ் போ சேன்ஜ் இன்டர்நேஷனல்' (Partners for Change International) நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளரார் றிசாத் செரீப், ஓய்வு பெற்ற சிரேஷ்ட வருமான பரிசோதகர், சிரேஷ்ட ஊடகவியலாளர் அப்துல் ஜப்பார் சமீம் உட்பட அமைப்பின் நிர்வாகிகள், ஊடகப் பிரதிநிதிகள், சமூக சேவை ஆர்வலர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு, தாருஸ்ஸஃபா நிறுவனங்கள் முன்னெடுத்து வரும் சமூக அபிவிருத்தி மற்றும் ஊடக சேவைப் பணிகளை பாராட்டினர்.
இந்த டி-ஷர்ட் அறிமுகம், எதிர்காலத்தில் அமைப்பு முன்னெடுக்கவுள்ள சமூக சேவை, விழிப்புணர்வு மற்றும் ஊடகச் செயற்பாடுகளுக்கு மேலும் ஊக்கமளிக்கும் ஒரு முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது.
தாருஸ்ஸஃபா டிஜிட்டல் மீடியா நெட்வொர்க் மற்றும் தாருஸ்ஸஃபா சமூக அபிவிருத்தி அமைப்புகள், சமூக நலன், உண்மையான தகவல் பரிமாற்றம் மற்றும் அபிவிருத்தி நோக்கமுடைய ஊடகச் சேவைகளில் தொடர்ந்து தங்களை அர்ப்பணித்து செயற்படும் எனவும் இந்நிகழ்வின் போது தெரிவிக்கப்பட்டது.








0 comments :
Post a Comment