ஆதம்பாவா எம்.பி மற்றும் சுகாதார, வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கிடையில் கலந்துரையாடல்



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
ல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டு, நிறைவடையாத நிலையில் காணப்படுகின்ற OPD மற்றும் ETU பகுதிகளைக் கொண்ட கட்டடத்தின் மிகுதி வேலைகளை பூர்த்தி செய்வது சம்பந்தமான கலந்துரையாடலொன்று கடந்த  திங்கட்கிழமை (12) சுகாதார அமைச்சில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவரும், இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களுக்கும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களுக்கும் இடையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

2025 ஆம் ஆண்டு இக் கட்டட மிகுதி வேலையின் மதிப்பீடு மத்திய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைய, சுமார் 1120 மில்லியன் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் பெப்ரவரி அளவில் இக்கட்டட வேலையின் நிர்மாண, நிபுணர் குழு சுகாதார அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய விஜயம் செய்யவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :