இலக்கை நோக்கி பயணிப்போம்.- புத்தாண்டு வாழ்த்து செய்தியில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்



பேரிடரால் ஏற்பட்ட இழப்புகளில் இருந்து மீண்டெழுவதற்கு நாம் தீவிரமாக முயற்சித்துக்கொண்டிருக்கின்றோம். இருந்த நிலையைவிட சிறந்த நிலைக்கு செல்வோம். அதற்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

அவரது புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வருமாறு,

“ ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் இந்த இனிய தருணத்தில், அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் துறை நாட்டின் பொருளாதாரத்திற்கும், உணவுப் பாதுகாப்பிற்கும் முக்கிய பங்காற்றுகிறது.

மீனவர்கள், நீரியல் விவசாயிகள் மற்றும் இந்தத் துறையுடன் தொடர்புடைய அனைவரின் உழைப்பும் அர்ப்பணிப்பும் எமது நாட்டின் வளர்ச்சிக்கான உறுதியான அடித்தளமாக விளங்குகின்றது.
எனவே, வரவிருக்கும் புதிய ஆண்டு பாதுகாப்பான வாழ்வாதாரம், நிலையான அபிவிருத்தி மற்றும் அனைவருக்கும் நலன் நிறைந்த எதிர்காலம் ஆகியவற்றை கொண்டுவரும் வருடமாக அமைய வேண்டும் என மனப்பூர்வமாக வேண்டுகிறேன்.
இந்தப் புத்தாண்டில் அமைதி, ஒற்றுமை, செழிப்பு மற்றும் நம்பிக்கை உங்கள் இல்லங்களையும் இதயங்களையும் நிரப்பட்டும்.
பேரிடரால் எமக்கு இழப்பு ஏற்பட்டதுதான். இந்நிலையில் இருந்து நிச்சயம் மீண்டெழுவோம். மீண்டெழுதல் என்பது விழுந்த நிலையில் இருந்து எழுதல் அல்ல. இருந்த நிலையைவிட சிறந்த நிலைக்கு செல்வதாகும். அந்த இலக்கை நோக்கி பயணிப்போம்.” – என்றுள்ளது.

க.கிஷாந்தன்
ஊடக செயலாளர்
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரின்…
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :