டிட்வா (Detua) சூறாவளி மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கிய ஐக்கிய அரபு அமீரக (UAE) நிவாரணக் குழு தனது பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து இலங்கையிலிருந்து புறப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகம்மது பின் ஸாயித் அல் நஹ்யான் அவர்களின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த அவசர நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மொத்தம் 116 டன் அவசர நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் உணவுப் பொருட்கள், கூடாரங்கள், நிவாரணக் பொதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் அடங்கும்.
மேலும், UAE தேடுதல் மற்றும் மீட்பு குழு, உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகளின் மூலம் காணாமல் போன 20 பேரின் சடலங்களை மீட்டதுடன், லேசான காயங்களுக்கு உள்ளான 8 பேருக்கு மருத்துவ சிகிச்சையும் வழங்கியது.
UAE நிவாரணக் குழுத் தலைவர், இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் உதவுவதில் UAE உறுதியுடன் இருப்பதாக தெரிவித்தார். மனிதாபிமான சேவை UAEயின் அடிப்படை கொள்கையாக விளங்குவதாகவும், பாதிக்கப்பட்ட சமூகங்கள் முழுமையாக மீண்டெழும் வரை அவர்களுடன் துணை நிற்பதே தங்களின் நிலைப்பாடு எனவும் அவர் வலியுறுத்தினார்.









0 comments :
Post a Comment