இக்குழுவினர் வருகை தந்தபோது அவர்களை அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் மற்றும் இலங்கையின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கே.பி. அருன ஜயசேகர ஆகியோர் வரவேற்றனர். அமெரிக்க அலுவலர்களும் அவர்களின் இலங்கை சகாக்களும் உடனடியாக பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அத்தியாவசியமான நிவாரணப் பொருள் விநியோகங்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
குவாமிலிருந்து செயற்படும் 36ஆவது CRG மற்றும் ஏனைய பிரிவுகளைச் சேர்ந்த அமெரிக்க விமானப்படை வீரர்கள், இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு உடனடி போக்குவரத்து மற்றும் ஏற்பாட்டியல் உதவிகளை வழங்குவார்கள். கடேனா விமானத் தளத்திலுள்ள படைகள் உட்பட, அமெரிக்க விமானப்படையின் 374ஆவது வான் போக்குவரத்துப் பிரிவு (யோகோட்டா விமானத் தளம், ஜப்பான்) மற்றும் அமெரிக்க மெரைன் கோர்ஸ் இன் III Marine Expeditionary Force (ஒகினாவா, ஜப்பான்) என்பன உதவி செய்வதற்கான மேலதிக பிரிவுகளில் உள்ளடங்குகின்றன.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கௌரவ. பேராசிரியர் கிறிஷாந்த அபேசேன, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் கௌரவ. ஜனித்த ருவான் கொடித்துவக்கு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
“அனர்த்த பதிலளிப்பு பணியில் ஈடுபட்டுள்ள இலங்கையர்கள் வீரதீரமான பணியினை மேற்கொள்கிறார்கள்” எனத் தெரிவித்த தூதுவர் சங், “சில கடுமையான பணிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்கா இங்கே வந்துள்ளது. அமெரிக்க வான் போக்குவரத்து மற்றும் ஏற்பாட்டியல் பலத்தினைப் பயன்படுத்தி, மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசியமான பொருட்களை வழங்குவதன் மூலம், முன்னணியில் பணிபுரியும் அணிகள் போக்குவரத்தின் மீது கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, மக்கள் மீது கவனம் செலுத்துவதற்கு உதவி செய்ய முடியும்.

இந்த சவாலான நேரத்தில் அமெரிக்கா இலங்கையுடன் அசைக்க முடியாத உறுதியுடன் நிற்கிறது, மீட்பு மற்றும் மீள்கட்டமைப்பு முயற்சிகளுக்கு உதவி செய்வதில் உறுதியாக உள்ளது.” எனக் குறிப்பிட்டார்.
அமெரிக்கத் தூதரகத்தின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியும், பாதுகாப்பு இராஜதந்திர அதிகாரியுமான மெத்திவ் ஹவ்ஸ், “வீதிகள் சேதமடைந்து வீதிப் போக்குவரத்து தடைப்பட்டும், நேரம் குறைவாகவும் இருக்கும்போது, போக்குவரத்து ஏற்பாட்டியல் வசதிகள் உயிர்நாடியாகின்றன” எனக் குறிப்பிட்டார். “மிகமுக்கியமான உதவிகளின் உயிர்நாடியை தொடர்ந்தும் உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக வான் போக்குவரத்துத் திறன் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றுடன் அமெரிக்கா இங்கே வருகை தந்துள்ளது. C-130J Super Hercules என்பது கடினமாகப் பணியாற்றும் நம்பகமான ஒரு விமானமாகும்.
அது போக்குவரத்து வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில் அத்தியாவசியமான சரக்குகளை விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் நகர்த்துவதற்காக உருவாக்கப்பட்டதாகும். இலங்கை ஆயுதப் படைகளுடன் நாம் மேற்கொள்ளும் எமது வழமையான கூட்டுப்பயிற்சிகள் வலுவான உறவுகளை உருவாக்கி, டிட்வா சூறாவளி போன்ற நெருக்கடிகளின்போது ஒன்றிணைந்து பணியாற்றும் எமது திறனை மேம்படுத்தியுள்ளன.” என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை அரசு விடுத்த ஒரு கோரிக்கையினைத் தொடர்ந்து இலங்கை ஆயுதப் படைகளுடனான ஒத்துழைப்புடன் அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைப்பீடமானது (INDOPACOM), டிட்வா சூறாவளி அனர்த்தத்திற்கான இலங்கையின் பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கான வான் போக்குவரத்து மற்றும் ஏற்பாட்டியல் உதவியினை வழங்குவதற்காக அமெரிக்க இராணுவ விமானத்தையும் அதிகாரிகளையும் அனுப்பி வைத்துள்ளது.

இலங்கை அதிகாரிகள் தேவைகளை மதிப்பிட்டு முன்னுரிமைகளை நிர்ணயிக்கும் போது, கட்டுநாயக்க விமானத் தளத்திலிருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தற்காலிக தங்குமிடப் பொருட்கள், பாதுகாப்பான குடிநீர், சுகாதார மற்றும் தூய்மை உதவிகள், உணவு உதவிகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் போன்ற அவசரகால நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்லும் இலங்கை தலைமையிலான வான் போக்குவரத்துப் பணிகளில் இலங்கை விமானப்படையுடன் இணைந்து அமெரிக்க விமானம் உதவி செய்யும்.
டிட்வா சூறாவளி அனர்த்தத்திற்கான இலங்கையின் பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கு நேரடியாக உதவி செய்யும், ஏற்கனவே செயற்பாட்டு ரீதியிலான பயன்பாட்டில் உள்ள திறன்களை உள்ளடக்கிய, அண்ணளவாக 2.1 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 640 மில்லியன் ரூபா) பெறுமதியான மிகமுக்கியமான வான் போக்குவரத்து மற்றும் ஏற்பாட்டியல் வசதிகளை வழங்கும் உபகரணங்களை உள்ளடக்கிய ஒரு பொதியினையும் அண்மையில் அமெரிக்கா இலங்கைக்கு வழங்கியது.

அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பினூடாக வழங்கப்பட்ட இப்பொதியானது எரிபொருள் ட்ரக் வண்டிகள், நிலைத்தன்மை பாகங்களைக் கொண்ட கவைகோல் பளுவேற்றிகள், பேரொளி விளக்குகள், நிலைத்தன்மை பாகங்களைக் கொண்ட தரை மின் இயந்திரங்கள் மற்றும் காவிச்செல்லக்கூடிய சரக்கு ஏற்றும் மேடைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இரவிலோ அல்லது பகலிலோ நிவாரணப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளல், ஏற்றுதல் மற்றும் நகர்த்துதல் ஆகியவற்றை விரைவாக மேற்கொள்வதற்கான இலங்கை விமானப்படையின் திறனை அது பலப்படுத்துவதனால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவிகள் விரைவாகவும் பெரிய அளவிலும் சென்றடைய முடியும்.
டிட்வா சூறாவளி கரையைக் கடந்து 72 மணி நேரத்திற்குள் பேரனர்த்த பதிலளிப்பு முயற்சிகளுக்கு உதவி செய்வதற்காக 2 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்தது. இது அமெரிக்க மக்களின் நல்லெண்ணத்தையும் இலங்கையுடனான எமது நீண்டகால பங்காண்மையினையும் பிரதிபலிக்கிறது. நம்பகமான நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களூடாக, சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசரகால தங்குமிட வசதிகள், தண்ணீர், சுகாதார மற்றும் துப்புரவு சேவைகளை வழங்குவதற்கு இவ்வுதவி துணைசெய்யும். டிட்வா சூறாவளி அனர்த்தத்தினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மீட்பு மற்றும் மீள்கட்டமைப்பு முயற்சிகளை இலங்கை அரசு முன்னின்று வழிநடத்தும் இவ்வேளையில் அமெரிக்கா அதனுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் இருக்கிறது.
இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தொடர்பான இற்றைப்படுத்தல்களுக்கு சமூக ஊடகங்களில் @USAmbSL மற்றும் @USEmbSL ஆகிய பக்கங்களைப் பின்தொடரவும்.

0 comments :
Post a Comment