கார்த்திகை தீபத் திருவிழா-அம்பாறை மாவட்டம்



பாறுக் ஷிஹான்-
கார்த்திகை தீபத் திருவிழாவில் இம்முறை பல வீடுகள் இருளில் மூழ்கிக்காணப்பட்டன.இவ்வாறு இருளில் மூழ்குவதற்கு காரணம் விளக்கு மற்றும் எண்ணேய் பற்றாக்குறை என மக்கள் தெரிவித்தனர்.இது தவிர டித்வா' புயல் அனர்த்தம் காரணமாக பல்வேறு சிரமங்களை மக்கள் எதிர்கொண்டமை ஆகும்.8 நாட்களாக சீரான மின்சாரம் குடிநீர் இன்மை எரிவாயு தட்டுப்பாடு மண்ணெண்ணெய் தட்டுப்பாடு பெற்றோல் டீசலுக்கு மக்கள் வரிசை என்பன இதில் உள்ளடங்கும்.

அவ்வாறு மேற்கூறிய விடயங்கள் இருந்தாலும் வழமை போன்று அம்பாறை மாவட்ட மக்கள் கார்த்திகை தீபத் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.

இந்துக்கள் நாடளாவிய ரீதியில் கோலாகலமாக இவ்வாறு கொண்டாடுகின்ற இததினத்தை முன்னிட்டு இரவு பெண்கள் ஆண்கள் சிறுவர்கள் என வீடுகள் தெருக்கள் மற்றும் கோவில்களில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ததை அவதானிக்க முடிந்தது.

சிறுவர் சிறுமியர் தத்தமது வீடுகளுக்கு முன்னால் தீபம் ஏற்றி ஆனந்தமடைந்தனர்.

மேலும் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு, சம்மாந்துறை,பெரியநீலாவணை ,கல்முனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை ,சேனைக்குடியிருப்பு ,வீரமுனை ,நாவிதன்வெளி ,அன்னமலை ,மத்தியமுகாம் ,அக்கரைப்பற்று ,திருக்கோவில் ,கோளாவில் ,ஆலையடிவேம்பு ,பகுதிகளில் உள்ள முருகன் ஆலயங்களில் குமாராலய தீபம் நடைபெற்ற நிலையில் ஏனைய தெய்வ ஆலயங்களில் சொர்க்கப்பானை எரித்து கார்த்திகைத் தீபத் திருவிழா சிறப்பாக இடம்பெற்றன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :